பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

றாசிரியர்கள் கருதுகின்றனர். ஆனால் இந்து அரசர்கள் வெற்றிச் சின்னமாகப் பெருந்தூண்களை எழுப்பி யிருக்கின்றனரே யன்றி, இதுபோன்ற உயர்ந்த கூம்புக் கோபுரங்களை எழுப்பியதாக இந்திய நாட்டு வரலாற்றில் காணமுடியாது. இக் கோபுரத்தைக் குத்புதீன் தான் எழுப்பி யிருக்க வேண்டும் என்று நம்புதற்கிட மிருக்கின்றது. அல்லது கோரி முகம்மது இக்கோபுர வேலையைத் தொடங்கி, குத்புதீனும் அல்டமிசும் இதை முற்றுப் பெறச் செய்திருக்கலாம் என்றும் எண்ண இடமிருக்கிறது. இக்கோபுர வேலை கி.பி. 1220 ஆம் ஆண்டு முற்றுப் பெற்றது.

குத்புதீன் தோற்றுவித்த அடிமையினப் பேரரசு அழிந்த பிறகு டில்லி நகரில் அரியணை ஏறி ஆட்சிபுரிந்த இசுலாமியப் பேரரசர்கள் கில்ஜி" இன அரசர்கள் . இவர்களில் குறிப்பிடத்தக்க பெருவீரன் அலாவுத்தீன் கில்ஜி. இவனுடைய படைத் தலைவனான மாலிக் காபூர் தமிழகத்து மதுரை வரையில் படையெடுத்து வந்து வெற்றி பெற்றான். வடக்கே இமயம் முதல் தெற்கே மதுரை வரையில் இவன் பேரரசு பரவிக்கிடந்தது.

தக்கணத்தில் தான் பெற்ற இவ்வெற்றியை. நிலை நாட்டும் பொருட்டுக் கில்ஜி ஒரு வெற்றிக் கோபுரம் எழுப்ப விரும்பினான்; அக்கோபுரம் குதுப்மினாரைப் போல் இருமடங்கு உயர்ந்ததாக, இருக்க வேண்டும் என்று எண்ணினான். கட்டட வேலையும் துவக்கப்பட்டது. ஆனால் அதன் துவக்க காலத்திலேயே அலாவுத்தீன் இறந்து,