பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89


மோகராக்கள் மதிப்புடையது. பாரசீக மன்னன் நாதிர்ஷா இந்தியாவின்மீது படையெடுத்தபொழுது டில்லி நகரத்தின் செல்வங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு சென்றானல்லவா ? அப்போது இம் மயிலாசனத்தையும், விலைமதிப்பற்ற கோகினூர் வைரத்தையும் மற்றக் கொள்ளைப் பொருள்களோடு கொண்டு சென்று விட்டான்.

நாதிர்ஷா தன் கொள்ளைப் பொருள்களோடு பாரசீகம் திரும்புவதற்கு முன்பாக இம்மாளிகையில் தான் வீற்றிருந்து, வெற்றிகொண்ட இந்நாட்டை மீண்டும் முகம்மது ஷாவிற்குத் திருப்பிக் கொடுத்தான். குலாம்காதிர், ஷா ஆலத்தின் கண்களைக் குருடாக்கிய இடமும் இதுவே. மொகலாய மன்னன், ஷா ஆலம், இம்மாளிகையில் வீற்றிருந்துதான் கி. பி. 1803 ஆம் ஆண்டு ஆங்கிலத் தளபதி லேக் பிரபுவிற்கு வரவேற்பு நல்கினான். இந்திய நாட்டிற்குச் சுற்றுலா வந்த ஆங்கிலப் பேரரசன் ஐந்தாம் ஜார் ஜும், அவருடைய மகன் வேல்சு இளவரசனும் இந்தத் திவானீ காசிலேயே அமர்ந்து நாளோலக்கம் நடத்தினர்.

திவானீ காஸ் மாளிகையின் பின்பகுதி மன்னர் வாழும் இருப்பிடத்தைக் கொண்டதாகும். இந்திய நாட்டைத் தம் விரலசைவில் ஆட்டிப் படைத்த மொகலாயப் பெருமன்னர்கள் உண்டு, உறங்கும் இடம் எத்தகைய சிறப்போடு இருந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. நம் கண்பட்ட விடமெல்லாம் மிக உயர்ந்த பளிங்குக் கற்களே தென்படும், சிற்ப நுணுக்கம் இல்லாத இடமே அங்கு இல்லை. உலகின் நாற்புறங்களிலும்