பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 பாஞ்சாலங் குறிச்சி
கட்டபொம்மு துரை கதை
விநாயகர் காப்பு வெண்பா

பூஞ்சோலை பொங்கும் புவி மீதருளாலே பாஞ்சாலி நந்நகர் பண்போங்கத் தேன் சொரியுங் கட்டபொம்மு கீதங்கழ றவே யானை முகன் தொட்ட கரப் பாதந் துணை

நடை
(காட்டுப் பாடல்)

தன்னன தானன தன்னன்னா தன்னன தானன தன்னன்னா. சீர் மலியு மெங்களாண்டவனே சித்திக்கணபதி. முன்னடவாய்.

நீர்மலியும் புதிமீதிவிலங்கிய நீதவிநோத வசீகரரனே, உத்தமனே நவரத்தினமே ஓங்காத்து ட்பொருளே, முந்தி முந்தி விநாயகனே, முருக பிரானுக்கு மூத்தவனே, ஆலரமத்தடிப் பிள்ளையாரே. அரசமரத்தடி விநாயகனே, வேலமரத்தடிப் பிள்ளையாரே, விக்கினம் வாராமற் காத்தருள் வாய், தந்தி முகனே தயாபரனே சங்கடமில்லாமற் காக்க வேண்டும் மோதகந் தோசை பணியாரம் முருக்கு சர்க்கரை எள்ளுருண்டை அப்பமவல் பொரிலட்டுடனே ஆனவகை யெல்லாம் நான் படைப்பேன் தேங்காயுடைத்த வைத்திடுவேன் தெச்சணையாலுனைக் கும்பிடுவேன். பாடவறியேன் படிப்பறியேன் பக்கத்துணை செய்ய வேண்டுமையா. ஏடறியேனெழுத்தறியேன் எந்தனைக் காப்பாற்ற வேண்டுமையா.