பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பூர வாசங்கமகமென கல்யாணமேடை பளபளென சாம்பிராணி வாசம் கமகமென தண்டைசிலம்பு கலகலென தொண்டரரோகராவென்றுரைக்கத் துத்துமி"மேளந் திடதிடென சங்கம் பம்போவெனச் சேகண்டி டண்டெனத் தண்டாயுதன் துணை என்றுரைக்க பாவனையாகிய பூஜையிலே பல்லாண்டு கூறிப் பணிந்தே r னம்மா வந்தென்னை ரட்சிக்க வேண்டுமம்மா, மன்னவன் கட்டன் கதைபடிக்க. மேற்படி சந்தம் - சக் கம்மாள் துதி என்னை ஆண்டவளே சக்கதேவி எங்களை முக்காலும் காகுமம்மா ஆண்டவளே குலதேவதையே, ஆதரிக்கவேண்டுஞ் சக்கம்மாளே மேல மலையாளம் போனவளே' விஞ்சை மந்திரங் கற்றவளே, தெற்கு மலையாளம் போனவளே தேவி மந்திரம் கற்றவளே பெண்டு மலையாளம் போனவளே பேற்பெற்ற மந்திரங் கற்றவளே. கொத்துப்பல்லாரியை யாண்டவளே கூடையிற் கூடவே வந்தவளே கூடையிற் கூடவே வந்தவளே கொப்பாடு சூல் கொண்ட சக்கதேவி மாராட்டப்பாசியுங்" கொண்டவளே மந்திர தந்திரங் கற்றவளே கைவளையோலை கருகுமணனி கண்டஞ்சொலித்திடும் சக்கம்மாளே 3. துத்துமி - துந்துபி மேளம். 4. மலயாளம் மந்திரவாதத்திற்குப் புகழ் பெற்றது. எனவே மந்திரவாதம் கற்க மலேயாளம் போக வேண்டும் என்றது. - - 5. கொத்துபல்லாரி - இவளே வணங்கும் கம்பளத்தார் பல்லாரியிலிருத்து வந்தவர்கள் என்று குறப்பாடல் அகிறது. அவர்கள் பல்காரியிலிருந்து வந்த போது; இவளும் கூடவே கூ ஈடயில் வந்தவள் என்பது கம்பளத்தார் நம்பிக்கை. 6, 1 மாராட்டப்பாசி, கருகுமணி.கம்பளத்தார் அணியும் அணிகலன்கள் . இவற்றைக் கோர்த்து அணிவார்கள். -