பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛露 போவதற்குத் தாரந்தாருமம்மா பொற்கொடியே மெத்தக் கற்புடையாய் தம்பியைக் கூட்டியே செல்வதற்கு தாயே உத்தாரந் தாருமம்மா தாய் முத்தியம்மாள் சொல்வது சக்கம்மை பாதவிசேஷ மதால் சந்ததியாய் வந்தகண் மணிகாள், கொத்துப் பல்லாரி தேசத்திலே கொண்டல் பொழியாத காரணத்தால், தாயொடு பிள்ளைகள் கூடாத சங்கடங்கள் பல நேர்ந்ததனல், இவ்விடந்தன்னிலி ருப்பதற்கே ஈசனமைத்தன னென் மகனே, எத்தனை காலங்கள் சென்ருலும் ஏமன் வராவிடில் பார்த்திடலாம். ஒர்கோடி காலங்கள் சென்ருலும் உடம்பிருந்திடிற் பார்த்திடலாம். மாயவழி சென்ற மானிடரை மாறியும் பார்க்க முடியாது. இரு பேரும் தாயை வணங்கல் நம்குலத் தாரிடஞ் செல்வதற்கே நல்வாக்குத்தந்திட வேண்டுமம்மா. கம்பளத்தாரிடம் செல்வதற்கே கட்டளை செய்திட வேண்டுமம்மா. செக்கர்நகர் சென்று வாரோமம்மா, சேவடி தாழ்த்தியே தெண்டனிட்டோம். இரு பேரும் செக் கர்நகர் சென்றவுடன் எட்டையபுரம் சின்னமுத்து பெரியமுத்து என்ற காவற்காரர்கள் ஆட்டைப் பற்றுவது - பெரியமுத்து சொல்வது. மேற்படி சந்தம் தம்பி கேளடா சின்னமுத்து சாமார்த்திய வேலை நடக்குதடா. காவலை மீறியகாரியங்கள் காரணமாக நடக்குதடா. ஏவலைமீறிய காரியங்கள் ஏதோ இங்கே நடக்குதடா. மன்னனை மீறிய காரியங்கள் வஞ்சகமாக நடக்குதடா. ஆரும் நுழையாத காவலிலே ஆடுமாடுகள் மேயுதடா. மாடுடனடுகள் மேய்வதற்கு மன்னரளித் தாராஉத்தரவு? சீக்கிரஞ் சென்றதைப் பார்க்கவேண்டும் செல்வனிடத்திலே - சொல்ல வேண்டும். விரைவிற் சென்றதைப் பார்க்கவேண்டும் வேந்தனிடத்தேை சொல்லவேண்டும். சல்தியிலே சென்று பார்க்கவேண்டும் தாமதமில்லாம லோடிவாடா,