பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கிஸ்தி கொடுக்காத உன் கையிலே கிட்டிகள் போடுவேன் சட்டப்படி சொல்லை மறுத்து நீ போயைானுல் துப்பாக்கிக் குண்டாலே சுட்டிடுவேன். சீமைக்கதிகாரர் வெள்ளைக்காரர் தேசமெங்கும் கொடி நாட்டையிலே, சட்டவிரோதங்கள் செய்தபின்னுல் தப்பவோ பார்த்தின யிப்பொழுது ? கேட்டதற்குப் பதில் சொல்லாத கெர்வத்தில் பேசாமற் போகலாமா ? கட்டபொம்முதுரை சொல்வது மேல்படி சந்தம் காசி தொடுத்துக் கன்யா குமரிவரை கட்டபொம்மு முந்தி தொட்டதில்லை என்மடியைத் தொட ஞாய முண்டோ இனிமேல் தொட்டிடில் - கோபம்வரும். ஊமைத்துரை சொல்வது மேற்படி சந்தம் கோபம் பிறக்குது கண்களிலே கொற்றவன் முந்தியைத் தொட்ட தளுல். மீசை துடிக்குது பார்க்கையிலே விட்டுவிடு முந்தி தொட்ட கையை பாதர் வெள்ளை பராக்கிரமம் மேற்படி சந்தம் பேசாமற் போவேனே பாதர்வெள்ளை பின்வாங்கி நிற்பேனே . சண்டையிலே. அல்லக்காப் புல்லக்காப் பாய்ந்தேனென் ருலாயிரம் வந்தாலுங் கண்டிடுமோ? கம்படிகுஸ்திகள் செய்தேனென்னுல் கண்டவர் சண்டைகள் - போடுவரோ ? கொண்டையன் கோட்டை மறத்தி பெற்ற கொடிமுடி வெள்ளை நானலல்லவோ? கட்டபொம்முதுரை சொல்வது-சக்கதேவி வணக்கம் மேல்படி சந்தம் என்னையாண்டவளே சக்கதேவி எங்களை முக்காலுங் காருமம்மா ஒன்பது கம்பள வாக்கினிலே உறுதி தந்திட வேண்டுமம்மா,