பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடாத செண்பகமே மங்கை உன்னைப் பார்ப்ப தெப்போ ? அடடாசண்டாளால் 2 துரண்டாமணி விளக்கே சூதாடும் பம்பரமே மாண்டாயோ நீமணந்த மங்கையுனைப் பார்ப்பதெப்போ? கொண்டையன் கோட்டையி:ே) கோலாகலக் கொழுந்தே அண்டருல கடைந்தாலடி யானைச் சேர்வதெப்போ அடடா சண்டாளா மாணிக்க முத்து வயிரம் விலைடோகையிலே ஆணிப் பொனென்ற தாரணியப்புகுந்தாயோ ? இத்தரையிலஞ் சாதிருந்த ஜெயக் கொடியை அத்தரையிலுள் ளோர்க்கு அறிவிக்கச் சென்றனயோ அடடா சண்டாளா சிங்கத்தின் கர்ஜனையால் திரண்ட கருமேகம் பங்கப் படுத்துமென்று பாராதிருந்தேனே. மல்லாளி யென்று மகுடத்தைச் சூட்டையிலே வில்லாளி நாட்டில் விருது பெறச் சென்ருயோ ? - அடடா சண்டாளா கோடை மழையிலே கூடு விட்ட குருவி போலே சால மழையிலே கன்றிழந்த மானைப் போலே கூவுகிறே நானடியாள் கொங்கையிலே கையறைந்து வாடுகிறேன் நானடியாள் மன்ன உன் மேல் விழுந்து தேடுகிறேன் நானடியாள் திருமுகத்தைப் பாராமல் கூடுகிறேன் நானடியாள் கோலவிழி கூத்தாட ஒடுகிறேன் நானடியாள் உன்னுசை யில்லாமல் ஆடுகிறேன் நானடியாள் ஆதரிப் பாரில்லாமல் மீசை முறுக்கழகா வில்லேந்தும் கையழகா வில்லேந்துங் கைகளிலே வேந்தனிட்ட கங்கணமும் வேந்தனிட்ட கங்கணத்தில் வீராதி வீரனென்று பாந்த மிட்ட உங்களையே பாதர்வெள்ளை யென்றழைக்கும் போதெரித்துப் பேசையிலே பொன்னலே தேன் சொரியும் தேசிகமே 5 தெள்ளமுதே சிங்காரச் சோலையிலே மாசில்லாத கொக்கோக மல்லாடும் மன்மதனே போதாதார் சீமையிலே போகவழி தேடுகிறேன். ஆகாதார் சீமையிலே ஆனவழி தேடுகிறேன். 52. வெள்ளையன் மீது ஒப்பாரி சொல்லி வெள்ளேயம்மாள் பாடுவது. 53. வீரர் உலகம் (வீரசுவர்க்கம்) 54. மல்லாளி-யுத்த வீரன் 55. வில்லாளி தாடு-வில்வீரர் இறந்தபின் செல்லும் நாடு 58. தேசிகம்-அறிவாளி