பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ {} யாரைச் சதமென்பேன் பூமியிலே ஐயாவே உன் துணையல்லாமல் ? எவரைச் சதமென்பேன் பூமியிலே ஏந்தலே உன் துணையல்லாமல் ? ஆவி பதறுதே பார்க்கையிலே அங்கம் நடுங்குதே பேசையிலே8 ே ஆவி பழுக்குதே சிந்தையிலே ஆக்கமழிந்ததே பாஞ்சையிலே வாழை பழுக்குதே சோலையிலே மாங்குயில் வாடுதே - பாஞ்சையிலே. கூடிக் கலந்திடும் நாளையிலே கோலமழிந்ததே மேனியிலே வாரி யணைத்திடும் கையாலே மார்பிலடித்திடக் காரணமோ ? புஷ்ப மணத்திடுங் கையாலே பூமியில் தட்டவும் - காரணமோ ? நீங்கள் பிறந்தது வல்லநாடு நீதிபிறந்தது பாஞ்சையிலே ஆவிதுறந்தது சண்டையிலே ஆண்டவன் என்னெதிர் வாரதப்போ ? நாங்கள் மயங்கிய வேளையிலே நாயகனென்றெதிர் வாரதெப்போ ? வீரம்பிறந்த வல்லநாடு வெற்றியடைந்தது பாஞ்சையிலே. சாமிபிறந்தது வல்லநாடு தங்கம் பிறந்தது வல்லநாடு தங்கம் மயங்கிய வேளையிலே சாமி நீ என்னெதிர் வாரதெப்போ ? உன்கட்டை சந்தணக்கட்டையிலே ஓங்கிய தீயினில் - வேகையிலே என்கட்டை தங்கமா உன்னுடன் இன்றே உடன்கட்டை ஏருமல். கட்டபொம்முதுரை வெள்ளையணிறந்த உடன் ரொம்பக் கவலை யடைந்து பதிலாள் தேடப்புறப்படல்-மேற்படி சந்தம் கட்டபொம் முதுரை சொல்வது தம்பிதம்பி ஊமைத்துரை சங்கடம் நேர்ந்ததைப் பார்த்தனையா ? மட்டில்லா வெள்ளையன் போனபோதே வல்லபம்பேசவு - - - மார்க்கமுண்டோ ? கோடிதவங்கள் செய்தாலுங் கொற்றவன் போலக் ാ ? 80. பேசுகையிலே 81. தங்கம்-வெள்ளையம்மாள் தங்கமென்று தன்னேக் குறிப்பிடுகிருள். அவள் பிறந்த ஊரும் வல்லநாடு.