பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76



சின்ன வீராயி சொல்வது
ஆமடி ஆமடி பெரியபுள்ளே அறிந்து சொன்ன நீ கெட்டிக்காரி

அதற்குத் தந்திர மொன்றுளது அவற்றைச் செய்யிற் பிடித்திடலாம். முந்திரிச் சாராயங் கோழிக்கறி முட்டை கொடுத்து மயக்கவேண்டும்

போதைவெறியிலே தூங்கையிலே புலன் தெரியாமல் கட்டவேண்டும்

அவ்வஞ்சனையைச் சக்கதேவியால் வெற்றியடைந்து திண்டுக்கல் மலையில் சுப்ரமணியர் கோவில் வந்து எங்கே போனலும் தப்ப முடியாது பின் வாரீஸ் துலங்க நமது மனைவி தப்பினாள். நாம் தற்கொலை செய்யவேண்டுமென உடனே தற்கொலை யாலிறந்தார்81.

'

தேவர்கள் புஷ்பமாரி பொழிந்தார்கள்.
சுபம் ! சுபம் !! சுபம் !!!
சக்கதேவிக்குப் பட்டாபிஷேகம்
பார் வாய்ந்த பாஞ்சாலி பதி வாழி பக்தி தரும் சக்கம்மாள் பதமும் வாழி சீர் வாய்ந்த நமது மன்னர் செங்கோல் வாழி தெய்வீகக் கட்டபொம்மு தீரம் வாழி ஏர் வாய்த்த ஆங்கிலேய அரசும் 82 வாழி எமது குல வெள்ளை முதலியாரும் வாழி நேர் வாய்ந்த இன்னூலைப்பாடச் சொன்னேர் நிச்சய மென்று ரைத்தவரும் நீடுழி வாழி

81. பிறசெய்திகளும், சான்றுகளும் இத் தற்கொலைச் செய்தியை உறுதி படுத்தவில்லை. சிவகங்கைக் கும்மி, அம்மா &ன இவ்விரண்டும், சிவகங்கைப் போல் ஊமைத்துரை கலந்துகொண்டு பிடிபட்டுத் தூக்கிலிடப்பட்டதாகக் கூறுகின்றன. வேறு கட்டபொம்மு கதைப்பட ல்கள் ஊமைத்துரை சண்டை யில் இறந்தாகக் கூறுகின்றன. தற்கொலைக் கதை மிகவும் பிற்காலத்தில் எழுந்தது. இதன. வலியுறுத்தச் சான்றுகள் இல்லை. 82 கதையின்ஆ ம்பத்திலும், கதையின் முடிவிலும் ஆங்கிலேயே அரசை வாழ்த்தியோ, போற்றியோ வாசகங்கள் வரும். புலவர்களும், கலைஞர்களும் போலீசுகாரர்களது கெடுபிடிகளிலிருந்து தப்பிப் பாட்டைப்பாடவும் கூத்தை நடத்தவும், சிற்சிலஇடங்களில் இவ்வாறு ஆங்கிலேயரைப் புகழ்வார்கள், ஆகுல் கதை முழுவதும் பிரிட்டிஷ் எதிர்ப்பை வளர்ப்பதாகவே இருக்கும், சிற்சில இடங்களில் கட்டபொம்முவை ஏசுவதும் உண்டு. பிற்காலப் பாடல்களில் இது சற்று அதிகமாக இருக்கும். பிரிட்டிஷ் அரசாங்கத்தை வாழ்த்தாவிட்டால் போலீசாரும்,வெள்ளே அதிகாரிகளும் பாட்டைப்பாடவோ, கூத்தை நடத்தவோ அனுமதிக்க மாட்டார்கள்,