பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5

 இவ்வாறு பாடியவர்கள், கட்டபொம்மு சாதியைச் சேர்ந்த கம்பளத்தார் மட்டுமல்ல. எல்லோரும் பாடினார்கள். இவ்வாறு மக்கள் நினைவுகளும் உணர்ச்சிகளும் பாடல் உருவம் பெற்றன. பாடலிலும், ஆடலிலும் வல்லவர்கள் அவற்றை எழுதி வைத்தார்கள். அவையே கதைப் பாடல்களாக உருவாகி, ஒயில் கும்மியாகவும், கூத்தாகவும், கூட்டுப் பாடலாகவும் கட்டபொம்மன் காலத்திலிருந்து இடையாராத வெள்ளமாக ஓடத்தொடங்கியது. இடையிடையே பல சிறுகதைகள் இக்கதை வெள்ளத்தில் சேர்ந்து சங்கமித்தன.

    இதுவரை கட்டபொம்மனைப் பற்றி வெளியிடப்பட்டவை மூன்று நாட்டுக்கதைப் பாடல்களே. சிரஞ்சீவி என்னும் எழுத்தாளர் பகுதிபகுதியாக ஒர் கட்டபொம்மன் கும்மிப்பாடலை உரை நடையான கதைப் போக்கோடு சேர்த்து வெளியிட்டுள்ளார். இது முழுமையான கதைப்பாடல் ஆகாது. இதன் பின் நான் முன் குறிப்பிட்டபடி N. C. B. H. பதிப்பகத்தார் 1961ல் வெளியிட்ட எனது பதிப்புத்தான் முதன் முதலில் வெளியான கட்டப்பொம்மனைப் பற்றிய நாட்டுக்கதைப்பாடல். அது கட்டபொம்மனது காலத்தில் வாழ்ந்த நாட்டுப்பாடல் புலவர் ஒருவரால் எழுதப்பட்டது. அதற்கடுத்து நான் பதிப்பித்திருக்கும் கட்டபொம்மன் கதைப்பாடலை மதுரைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. நா ன் கா வ. து. இக்கூத்துப்பாடல், கட்டபொம்மன் வரலாறு பற்றிச் சில நூல்கள் புராணப்பாணியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் இலக்கிய மதிப்போ, வரலாற்று மதிப்போ இல்லை.
    கட்டபொம்முவின் வரலாற்றுண்மையான செய்திகள் பற்றிக் 1961ல் வெளியான N. C. B. H. பதிப்பிலும், மதுரைப்பல்கலை கழகப்பதிப்பிலும் நான் ஆராய்ந்துள்ளேன். எனவே இம்முகவுரையில் அதனை மீண்டும் ஆராய அவசியமில்லை.
    இந்நூலை வெளியிட முன்வந்த மதுரைப் பல்கலைக் கழகத்திற்கும், அதற்காக யோசனை கூறிய துணைவேந்தர் தெ. பொ, மீனாட்சி சுந்தரனாருக்கும் எனது நன்றி. ஒரு வரலாற்றுக் கதைப் பாடலை மறைந்து போகாமல் பாதுகாத்த பெரும் பணியை அவர்கள் செய்துள்ளனர். அவர்களுக்கு நாட்டுப் பண்பாட்டு ஆராய்ச்சித் துறையினரும் தமிழ் மக்களும் பெரிதும் கடமைப்பட்டுள்ளனர்.
    மிகப் பழைய, பிழைகள் மலிந்த அச்சுப்பிரதிகள், நோட்டுப் புத்தகங்கள், ஏட்டுப் பிரதி இவற்றினின்றும் இந்த நூலை முழுவது