பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

 என்க. இப்பண்பைப் பெறாத நிலை, மக்களுக்குக் குற்றம் உண்டாக்கும். அபகீர்த்தியையும் ஏற்படுத் தும் என்பதை,

அய்து குடியில் பிறந்தரு நூல்
ஆய்ந்து செல்வத் துயர்ந்ததனால்
எய்தல் அரிது பெருமை.அ.ஃது
எய்தும் கொடைஒப் புரவாதி
செய்தற் கரிய செய்து பிறர்
செயிர்கூ றாமல் தருக்காமல்
உய்தி நெறியில் பிறழாமல்
ஒழுகு வார்க்குள் ளுதிமைந்தா,

என்ற விநாயக புராணப் பாடலால் அறியலாம்.

இறைவனால் படைக்கப்பட்ட உயிர் இனங்களுக்குள் வேறுபாடு இல்லை. பிறப்பளவில் எல்லாம் ஒன்றே. "எம்மினம் பெரிது ; உம்மினம் சிறிது ” என்று கூறுதற்கு இல்லை. பிறப்பால் உயர்வு தாழ்வு கூறுதல் சிறப்பாகாது. ஆனால், அவர் அவர்கள் செய்யும் தொழிலாலும் செயலாலும் மட்டும் பெருமை சிறுமைகளைக் கூறலாம்.

அவர் அவர் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப மண், நீர், தீ, காற்று, விண் ஆகிய ஐம்பூதங்களின் காரியமாகிய உடம்பைப் பெற்றுகின்று அவ்வுடம்பின் பயனைத் துய்த்தல், எல்லா இனத்தவர்க்கும் சமம். ஆதலின், பிறப்பு, ஒத்து உள்ளது என்க. அவர் அவர்களின் பெருமை சிறுமைகளுக்கு உரைகல்லாக உள்ளவை, அவரவர் செய்யும் தொழிற் பிரிவுகள் ஆதலின், அங்கிலேயில் உயர்வு தாழ்வு கருதலாம். ஏனெனில், ' பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளேக் கல் என வள்ளுவர் கூறுகின்றார் அல்லரோ ? எனவே, குலத்தினால் பெருமையை அறிதல் ஆகாது. ஆசாரமே பெருமைக்குக் காரணம். இந்தத்