பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

என்ற முதுமொழிமேல் வைப்புவெண்பா இக்கருத்தை எவ்வளவு அழகாக நிலைநாட்டுகிறது. பாருங்கள் !

நகுடனும் பல்லக்கில் முனிவர்கள் சுமந்து செல்ல ஊர்ந்துதான் சென்றான். ஆனால், விரைவாகச் செல்க என்ற பொருளில் 'சர்ப்ப' என்று கூறிய அளவில் என்னானான்? சுமந்து சென்ற முனிவரால் சர்ப்பமாகும் சாபத்தைப் பெற்றான் அல்லனே ?

"கும்பமுனி யால்நகுடன் சர்ப்பஎன்றே குண்டலியாய்
மொய்ம்பிழந்து வீழ்ந்தான்."

என்னும் முருகேசர் முதுகெறி வெண்பாவைக் காண்க.

இத்தகைய பெருமை ஒருவனுக்கு எப்போது வரும்? ஒருமனப்பட்ட மகளிர் தம் மனத்தைப் பலவாறு சிதரவிடாமல் இருந்து, தன் கற்பைக் காத்துக் கொள்வதுபோல, ஒரு மனிதன் தன் நிறையினையும் தவறாமல் காத்து வந்தால்தான் உண்டாகும். அதாவது காக்கவேண்டுவனவற்றைக் காத்துக் கடிவனவற்றை நீக்கி ஒழுகுதல் என்பதாம். சுருங்கக் கூறின் மன மொழி மெய்களை அடக்கி,உபகாரம் முதலியவற்றைச் செய்து வருதல் எனலாம். வறுமையுற்ற காலத்திலும் பிறரால் செயற்கரிய செயலைச் செய்ய வல்லவரே பெருமை அடைவர். இங்ங்னம் செய்பவரே சால்புடைய மக்கள் ஆவார்.

அரிய செயலைச் செய்யும் மக்களா கிய பெரியாரை நாமும் போற்றிக் கொள்ள வேண்டும். அவர்கள் செய்யும் அரிய செயல்களை ஒவ்வொருவரும் செய்ய முந்த வேண்டும். ஆனால், சிறியவராயினார் இங்ஙனம் இப்பெரியார்களைப் போற்றுதலும் செய்பார். அவர்கள் செயலை மேற்கொண்டு ஆற்றுதலையும் செய்யார். அச்சிறியார் ஏன் இவ்வாறு செய்ய வேண்டுமென்பதை மனத்தாலும் நினையார், சிறியார்