பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"அவனது நாட்டில் அமைந்த செங்கோன்மை காரணமாக விலங்குகள் தமக்குள் பகைமையின்றி வாழ்ந்தன : பறவைகள் தமக்குத் தான்யம் இன்மை காரணமாக வேற்றுநாட்டகம் புகாது சோழ நாட்டகத்திலேயே வாழ்ந்து வந்தன". என்னும் கருத்துக்களை அமைத்து "நீதியபுள்ளும் மாவும்" என்று சுருங்கக்கூறி விளங்கவைத்தனர். இவ்வாறு புலவர் பெருமானர் புகன்றதன் நுண்பொருளை நன்கு உணர்ந்த கம்பர் தம்நூலில் தசரதன் அரசியல் மேம்பாட்டைக் கூறுகையில்,

'வெள்ளமும் பறவையும் விலங்கும் ஒருவழி ஒடநின்றவன்'

என விதந்துகூறினர். நீதியபுள்ளும் மாவும் என்று சேக்கிழார் கூறிய தொடருக்குக் கம்பரது வாக்கு ஒரு விளக்கம்தருவதாக அமைந்திருப்பதை அறிஞர்கள் ஊன்றிச் சிந்திப்பாராக.

திருநீலகண்டர் வரலாற்றில் நடுநாயகமாக விளங்கும் சீரிய நிகழ்ச்சி திருநீலகண்டநாயனார் தம் வாழ்க்கைத் துனைவியாரிடம் உறுதி கூறிய கருத்தாகிய 'எம்மை என்ற தனால் மற்றைய மாதரார் தம்மை என்றன் மனத்தினுந் தீண்டேன்’ என்றதாகும். இச்சீரிய கருத்தைக் கம்பர் தம் நூலில் ஏற்ற இடத்தில் வைத்துப் பாடவேண்டும் என்று கருதி, அதற்குரிய இடங்களே நாடியபொழுது அவர்க்கு ஒர் இடம் கிடைத்தது, அதுவே அது மனும் சீதையும் பேசிக்கொண்ட இடமாகும். அப்பேச்சில் சீதை இராமனிடம் அறிவிக்குமாறு அது மனுக்குக் கூறுகையில்,

வந்தெ இனக்கரம் பற்றிய வைகல்வாய்
இந்த விப்பிற விக்கிரு மாதரை
சிந்தை யாலும்தொ டோன் என்ற செவ்வரம் தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்