பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செறிவு, இவர் குத்திப் புண்ணாக்கிக் கொள்வதை நிறுத்தச் செய்தது. இதனை அழகுபட இவர் காலத்துப் பெரும் புலவர் மருத்துவன் தாமோதரனார் தமது அருமைப் பாடல் ஒன்றால், "வள்ளுவர் முப்பாலால் தலைக் குத்துத் தீர்வு சாத்தற்கு" என்று விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, மேலே காட்டிய காரணங்களால் இப்புலவர் பெருந்தகையார் மதுரைக் கூலவணிகச் சீத்தலைச் சாத்தனார் என்று குறிக்கப்பட்டு வந்துள்ளார். இவர் மதுரைச் சீத்தலைச் சாத்தனார் எனவும், சீத்தலைச்சாத்தனார் எனவும், சாத்தனார் எனவும் அழைக்கப்படுவாரானார்.

சாத்தனார், இவரைப்போன்ற புலவர்களால் சிறப்பிக்கப்பட்ட சீர்மையோர் ஆவார். இவரோடு இணைந்து நட்புக் கொண்டிருந்த புலவர் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகளார் ஆவார். அவர் இவரைக் குறிப்பிடும் போதெல்லாம் "நன்னூல் புலவன்" என்றும், "தண்டமிழ் ஆசான் சாத்தன்" என்றும் குறிப்பிட்டு இவர்க்கு இருந்த தண்தமிழ் அறிவையும், நல் நூல்களே இயற்றும் வன்மையினையும், ஆசிரியர் என்று போற்றத்தக்க பெருமைசான்றவர் என்பதையும் நன்கனம் புலப்படித்தியுள்ளார்.

சீத்தலைச் சாத்தனார் இளங்கோ அடிகளின் தமையனை சேரன் செங்குட்டுவனிடத்தில் நட்புக் கொண்டிருந்தனர். அந்நட்புக் காரணமாகக் கண்ணகி என்பாளது பிறப்பின் மேம்பாட்டை எடுத்துக்கூறியவர். மேலும், அவளுக்குக் கோயில் கட்டு வித்து நித்தியபூசைகள் நியமமாக நடத்தக் காரணமானவர். சாத்தனார் வேண்டுகோளுக்கு இணங்கியே இளங்கோ அடிகளார் சிலப்பதிகாரமாம் சீரிய நூலை யாத்தனர். ஆகவே, கற்புடைக் கடவுளாம் கண்ணகியின் கோயில் எடுப்புக்கும் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமாம் காவியத்தை நாம்பெறு

க-5