பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

இன்றேல், கம்பர் கவிச்சக்கரவர்த்தி யென்று தமிழ் மக்களால் மதிக்கப் பட்டிருக்கமாட்டார். மேலும், கம்பரே சான்றோர் கவி எவ்வாறு இருக்க வேண்டுமென்பதை,

“புவியினுக்கு அணியாய் ஆன்ற பொருள் தந்து புலத்திற்றாகி
அவிஅகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறிஅ ளாவிச்
சவியுறத் தெளிந்து தண்ணென் றொழுக்கமும் தழுவிச்
                                                    சான்றோர்

கவியெனக் கிடந்த கொதா விரியினை வீரர் கண்டார்”

என்ற பாடலைப் பாடி விளக்கியிரார் அல்லரோ? இவ்வாறு சான்றோர் கவிக்கு ஒரு தனிச் சிறப்பிலக்கணம் தந்து பாடிய கம்பர், தம் கவியும் இம்முறையில் இருத்தல் வேண்டும் மென்பதைச் சிந்தியாமல் இராமாயணப் பெருங் காவியத்தில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியிரார்.

ஆகவே, கம்பர் கவிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டென்பதை உணர்தல் வேண்டும். கம்பர் கவிக்கு எடுப்பும் இணையும் அற்ற ஏற்றம் உண்டு என்பதைக் “கம்ப நாடன் கவிதையைப் போல் கற்றோர்க்கு இதயம் களியாதே.” என்ற அரும் பொருட்டொடர் எடுத்துக் காட்டுவதைக் காண்க. “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்ற பழமொழி கொண்டேனும் கம்பரது கவியின் பெருமையினை உணரலாம். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பது உயர்வு நவிற்சி அணியின்பால் பட்ட தெனினும், கம்பர் வீட்டில் பணிபுரிந்து வந்த ஒருத்தி, கம்பனைக் காணவந்த ஒரு புலவரை நோக்கி,

“வட்டமதி போலிருக்கும் வன்னிக் கொடிதாவும்
கொட்டுவார் கையினின்று கூத்தாடும்—சுட்டால்
அரகரா என்னுமே அம்பலசோ மாசி

ஒருநாள் விட் டேன்ஈ துரை”

என்று பாடி, அப்பாடற் பொருள் இன்னது