பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. கிறித்தவர் தமிழ்த் தொண்டு

பண்டைக்காலத் தமிழ் இலக்கியங்கள் பெரிதும் செய்யுளால் யாக்கப்பட்டவை. உரைநடை நூல்க ளாக ஒரு சிலவே தோற்றம் அளித்தன. இறையனர் களவியல் உரை, சிலப்பதிகாரம், அதன் உரை ஆகிய நூல்களே உரைநடை நூல்களுக்கு எடுத்துக்காட்டாக இயம்பலாம். இவைகள் கூட முற்றிலும் உரைநடை நூல்களாக அமைந்தவை எனல் இயலாது. இவை இடையிடையே உரைநடை அமைந்த நூற்கள். இது குறித்தே சிலப்பதிகாரம் உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்ற பெயரைப் பெற்றுள்ளது. இங்கில யில் உரைநடை வளத்தைப் பெருக்கியவர்கள் கிறித்து மதப் பெரியார்களான ஐரோப்பியர்கள் எனலாம். கரைநடைகளை மட்டும் இவர்கள் எழுதி வழிகாட்டிய வர்கள் அல்லர். தமிழ் அன்னேக்குப் பல அணிகலன் களாகப் பல தமிழ் நூல்களேயும் யாத்துள்ளனர். பழங் காலத்தில் தமிழர்கள் சொற்களுக்குரிய பொருள்களே இக்காலத்தைப்போல அகராதிகளைக் கொண்டறிங் இலர், சொற்பொருள்களையும் செய்யுளின் துணை கொண்டுதான் உண நீங்து வந்தனர். இதனே,

பகவனே ஈசன் மாயோன்

பங்கயன் சினனே புத்தன்

பகலேநாள் ஒருமு கூர்த்தம்

பகலவன் நடுவே தேசு