பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 கட்டுரைக் கொத்து

உணவு முதலியவற்றை மேற்கொண்டவர். இவர் புலால் புசித்திலர். தமிழ்ச் சமயல்காரர்களே அமர்த்தித் தூய உணவு சமைக்க ஏற்பாடு செய்தனர். ஒரு வேளேயே உண்டு வந்தனர். கோபிச்சங்தனம் கெற்றியில் இட்டு வங்தனர். காவி உடை உடுத்தினர். காலில் கட்டை மிதியடி பூண்டு நடந்தனர். காதில் முத்துக்கடுக்கன் பூண்டனர். சிவிகையில் சென்று வந்தனர். புலித் தோலே இவருக்கு இருக்கை ஆகும்.

இவர் தமிழ், தெலுங்கு, வடமொழி, இந்துஸ்தான் பாரசீக மொழிகளைப் பயின்றவர். இவர் பன்மொழி களைப் பயின்றிருந்தும் தமிழ்மொழியில்தான் பல நூல் களேச் செய்துள்ளனர். அவையே, சதுர் அகராதி, தமிழ் இலத்தின் அகராதி, தொன்னூல் விளக்கம், பரமார்த்த குரு கதை, வேதியர் ஒழுக்கம், வேத விளக்கம், தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பகம் முதலியன.

இவற்றுள் தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம் பகம் என்னும் நூற்களைப்பற்றிய சிறு குறிப்பை மட்டுமே ஈண்டுக் காண்போமாக.

தேம்பாவணி : இது பெருங்காப்பிய அமைப்பில் அமைந்த நூல். தேம்பாவணி என்பது இனிய பாவின் அழகு கொண்டு விளங்கும் நூல் என்னும் பொருள் தரும் தொடராகும். வாடாத மாலே என்று பொருள் கூறினும் அமையும், இஃது ஏ. சுப் பெரு மாளுரின் அருமைத் தங்தையாராகிய சூசையப்பரது வரலாற்றைக் கூறுவது. இதில் சிங்தாமணி, கம்பராமாயண குடை, கருத்தழகு முதலியவற்றைக் காணலாம்.