பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 கட்டுரைக் கொத்து

வேதநாயகம் பிள்ளை

இவர் சோழநாட்டில் திரிசிரபுரத்துக்கு அருகி லுள்ள குளத்தூரில் கத்தோலிக் கிறித்தவச் சமயத்தில் பிறந்தவர். ஆங்கிலமும் அருக்தமிழும் அறிந்தவர். டிஸ்டிரிக் முனிசிபாகப் பணிபுரிந்தவர். இவர் திரிசிர புரம் மகாவித்துவான் மீட்ைசி கந்தரம் பிள்ளை அவர் களின் நண்பர். மானுக்கர் என்றும் கூறுவாரும் உளர். இவர் நீதிநூல் என்னும் நூலே எழுதியவர். இதில் பல வகை நீதிப்பாடல்கள் உள்ளன.

இந்த நீ தி.நூ லின் அவையடக்கச் செய்யுள் ஒன்றில், உலகில் நடவாத ஒரு நாடகத்தை உவமை காட்டிப் பாடி இருப்பது படித்துச் சுவைத்தற்குரிய தாகும். அப்பாடல்,

முடவரே ஆட அக்தர்

முன்நின்று பார்த்து வக்கத் திடமொடு மூகர் பாடச்

செவிடர்கேட் டதிசயிக்கக் கடல்உல கினில்கண் டென்னக்

கனவினும் கலேயைத் தேரா மடமையேன் உலக நீதி

வகுத்திடத் துணிந்தேன் மன்னே என்பது.

நீதிநூலில் இலஞ்சம் வாங்குபவர்பால் செல்லற்க என்பதை நல்ல உவமைகளைத் தங்து விளக்கிப் பாடி யுள்ளார். அச்செய்யுளே நாம் படித்தறியில், இலஞ்சம் வாங்குபவர்மாட்டு நாம் செல்ல நம் உளம் எழுமோ ? எழாது. அப்பாடலைக் காண்மின் !