பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கட்டுரைக் கொத்து

பூரியர் தமைவேங் தாக்கும்

புவிபுரப் பிக்கும் துய்க்கும் சீரிய உண்டி சேர்க்கும்

தேவர்தம் உலகம் போக்கும் காரியம் அனைத்தும் கூட்டும்

கருதலார் தம்மை வாட்டும் கூரிய திதன் மேல் இல்லை

கொழும்பொனிர் கொண்மின் என்ருர் என்றும், வளையாபதி,

குலம்தரும் கல்வி கொணர்ந்து முடிக்கும் அலந்த கிளைகள் அழிபசி நீக்கும் என்றும் கூறியிருத்தலேக் காண்க.

கையில் பொருள் இன்றெனில், எவரும் நம்மை மதியார், மதிக்காமல் இருப்பினும் கவலே இல்லே. நம்மை இகழ்ந்தும் பேசுவர். செல்வம் நம்மிடம் இருக்குமேல் வாராதவர்களும் வந்து மேன்மே லும் சிற்ப்புச் செய்வர். இக்கருத்தை நாயனர்,

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லோரும் செய்வர் சிறப்பு என்று செப்புதல் காண்க. இவரது கருத்தை அடி ஒற்றிப் பழமொழி நானு று,

அருளுடை யாரும் மற்றல்லா தவரும் பொருளுடை யாரைப் புகழாதார் இல்லை என்றும், நல்வழி, கல்லானே ஆலுைம் கைப்பொருளொன் றுண்டாயின் எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர்-இல்லானே இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள் செல்லா தவன்வாயின் சொல். என்றும், நீதிநெறி விளக்கம்,