பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 கட்டுரைக் கொத்து

றனர். இப்பொருள் நம்மிடம் இருக்குமேல், அது நமக்குக் கூரிய படைக்கலமாக இருந்து நமது எதிரிக களே அழிக்கும். இந்தக் கருத்தைத்தான், *

செய்த பொருளைச் செறுகர் செருக்கறுக்கும் எஃகதனில் கூரிய தில்

என்றருளிச் செய்தனர்.

இந்தத் தமிழ் மறையின் அடிப்படையில் எழுந்த கருத்துக்களே அகநானூற்றில்,

செறுவோர் செம்மல் வாட்டலும் சேர்ந்தோர்க்கு உறுமிடத்து உவக்கும் உதவி ஆண்மையும் இல் இருக் தமைவோர்க் கில்என் றெண்ணி வெஞ்சுரம் இறக்தனர் என்பதும், கலித்தொகையில்,

பெரிதாய பகைவென்று பேைைரத் தெறுதலும் தரும்எனப் பிரிடுவண்ணிப் பொருள்வயின்

சென்றகம் காதலர் என்பதும் ஆகும்.

பொருளின் சிறப்பைத் தனித்த முறையில் எடுத்து இயம்புதற்கே தமிழில் பணவிடு துது என்னும் நூலும் எழுந்தது.

மக்கள் அடையவேண்டிய புருடார்த்தங்கள் நான்கு, அவையே அறம், பொருள், இன்பம், வீடு என்பன. ஈண்டு வீடு என்பது சிங்தையும் மொழியும் டுசல்லா விலைமைத்து. ஆகவே, பெரிதும் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றைப் பற்றியே கருத்