பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1, 19 கட்டுரைக் கொத்து

லுமே வரும் பொருளாக அமை தல்வேண்டும் இவ்வாருக அமையாத பொருள் அறத்தையோ இன்பத்தையோ தராது. ஆகவே, ‘தீய வழியில் வரும் பொருள் தேவை இல்லை, அதனே ஒழிக்க' என்று கண்டித்துப் பாடுவார் போல் பெருகாவலர்,

அறன்சனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து தீதின்றி வந்த பொருள்.

அருளொடும் அன்பொடும் வாரசப் பொருள் ஆக்கம் புல்லார் புரள விடல்

என்று பாடி உணர்த்தினர். தெய்வப்புலவர் அறவுரை களே உள்ளத்தில் கொண்டே சீவகசிந்தாமணி,

ஐயம் இலை, இன்பம்அற ைேடவையும் ஆக்கும் பொய்யில்பொருளே பொருள்மற் றல்ல பிறபொருளே

என்றும், காஞ்சிப்புராணம்,

பழியில் நீங்கிகன் கீட்டிய பசும்பொருள் சிறிதும் கழிபடாதுநல் வழிப்பயன் படுவது

என்றும் கூறுகின்றன. ஆகவே, நாமும்,

காடுமலை நாடும் கடலோடி யும்பொருளேத் தேடவே வேண்டும் தினகரா

என்று தினகர வெண்பா கூறுவதுபோல நல் வழியில் நிதியம் தேடிச் சிறக்க வாழ்வோமாக.