பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவற்பெண்டு 117

பறவைகளைக் கூறவந்தபோது, புலவர் கானக் கோழி, நீர்க்கோழி, மனேக்கோழிகள் என்று பகுத்து, அவற்றின் செயல்களையும் பாடியுள்ளனர். அகன்ற சேற்றினேயுடைய நீர் நிலைகளிலிருந்து பறவைகள் எழுந்து பறக்கும் என்றும் வருணித்துள்ளார்.

இன்னோன்ன சிறப்பினையுடைய உறங்தையில் வாழ்ந்தவன் தித்தன். இவன் மகனை போரவைக் கோப்பெரு நற்கிள்ளி என்ன கர்ரணத்தாலோ தங்தை யைப் பகைத்துக்கொண்டான்.

இப்பகைமை காரணமாகத் தனக்குரிய உறங்தை உரிமையையும் இழக்க நேர்ந்தது. தங்தையைத் தணங் தான். அரச உரிமையையும் இழந்தான். இதனல் வ று ைம ய ர ல் வாடினன். 'சோழ வள ரு டு சோறுடைத்து' என்னும் சிறப்புக்குரிய சோழநாட்டில் பிறந்து சிறக்கச் சோறுண்டு வாழவேண்டிய அவன் சோளக்கூழோ, கேழ்வரகு கழோ அருந்துவதற்கும் இயலவில்லை. புல்லரிசிக் கூழே அருங்தும் விதி அவ னுக்கு அமைந்தது. 'ஊழிற் பெருவலி யா உள ? என்னும் பொய்யாமொழியார் வாக்குப் பொய்க்குமா ? அவன் அவ்வாறு புற்கை (புல்லரிசிக் கூழ்) உண்டு வாழ்ந்ததைப் புற்கை உண்டும் பெருங்தோ ளன்னே’ என்னும் அடியால் தெரியவருகிறது. இத்தொடரால் இவன் புற்கை உண்டும் வாடாத வனப்புடைய பெருங் தோள ய்ை இருந்தமை பெறப்படுகிறது. கடுகு செத் தாலும் காரம் போகுமா ? சோழ மரபினனை தித்தன் மகன் அல்லனே இவன் ?

சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியைச் சாத்தங்தையார் என்னும் ஆண்பாற் புலவரும், பெருங்