பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவற்பெண்டு

ஆத்தி மாலே சோழர்க்கு உரியது என்பதை ஈண்டு நினைவு கொள்க.

இன்ைேரன்ன குடிச்சிறப்பும் மற ச் சிற்ப்பும் கொண்ட கோப்பெரு நற்கிள்ளி, முக்காவல் நாட்டு ஆமூர் மல்லனுடன் பொருது வென்ற சிறப்பைக் காண்போமாக.

மல்லன் ஆமூரினன் என்பதும், மிக்க வன்மை யுடையவன் என்பதும் அவனைப்பற்றிச் சாத்தங்தை யார், ஆமூர் ஆங்கண் மைந்துடை மல்லன்' என்று சுட்டி இருப்பதால் அறியலாம். அவனது வலியை அடக்கினன் என்பதை மதவலி முருக்கி என்னும் தொடர்விளக்கிக்கொண்டிருக்கிறது. ம ல் ல ன் மற் போரில் சிறந்தவன். இக்குறிப்பு அவன் பெயரால் அறிய வருகிறது என்பதை முன்பே கண்டோம். ஆகவே, அவைேடு வாட்போரோ விற்போரோ பெருநற்கிள்ளி தொடங்காமல் மற்போரே தொடங்கினன். அவனேடு மற்போரிட்டு அவனேக் கீழே சாய்த்தான், சாய்ந்த அவனது மார்பின்மீது ஒரு காலை ஊன்றினன். அப் பொழுது மல்லன் சோழனது பிடியினின்று விலகப் பல முயற்சிகளைச்செய்தான். இத்தகைய அவனது செயலேத் தடுக்க மற்ருெரு காலால் அவனது முதுகையும் வளைத் துக்கொண்டான் கிள்ளி. இந்தக் காட்சியினைப் புலவர் சாத்தங்தையார், ஒருகால் மார்போதுங் கின்றே, ஒரு கால் வருதார்தாங்கிப் பின்ஒதுங் கின்றே என்று பாடி அறிவித்துள்ளனர். இந்த அளவிலும் பெருகற் கிள்ளி நின்ருன் அல்லன். அவன் கால்களையும் தலையை யும் முறித்து வெற்றி கொண்டான்; மல்லனது தலையை காலேயும் பெருநற்கிள்ளி முறித்ததற்கு நல்ல உவமை