பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 கட்டுரைக் கொத்து

யினைப் புலவர் குறிப்பிட்டுள்ளார். அதுவே, பசித்துப் பணமுயலும் யானேபோல இருதலே ஒசிய' என்பது. அதாவது, பசிகொண்ட யானே மூங்கில முறிப்பது போலக் கரங்களும் தலையும் முறிய மோதி என்ப தாகும்.

சாத்தங்தையார், பெருநற்கிள்ளியின் வீரத்தை நேரில் கண்டே இவ்வாறெல்லாம் பாடியிருக்கிருர், தாம் கண்டதையே கூறியுள்ளார். இந்த வியப்பினைத் தம்மளவில் துய்க்க விரும்பவில்லே. இக்காட்சியினைப் புலவர், பெருநற்கிள்ளியின் தங்தையான தித்தனும் நேரில் தன் கண்களால் காணவேண்டும் என்று என்னு கின்ருர். எண்ணிய எண்ணத்தை வெளிப்படவும் தம் பாட்டிலும் இனத்துவிட்டார். இதோ பாருங்கள்,

கல்கினும் நல்கா யிைனும் வெல்போர்ப் போரருந் தித்தன் காண்கதில் அம்ம !

என்னும் அவரது உணர்ச்சிமிக்க அடிகளே. இங்ங்னம் பாடிய புலவருக்கு ஒர் ஐயம் உள்ளத்தில்உண்டு. தித்தன் தன் மகனது போர் குறித்து உவப்பனே உவக்கமாட் டானே என்பதே அவ் ஐயம். காரணம் தங்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட பகைமை. அங்ங்னம் இருந்தும் தித்தன் காணவேண்டும் என்பதே புலவரது உள்ளக் கிடக்கை.

போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் தோற்றப் பொலிவும் போர்த்திறனும், பெருங்கோழி நாய்கன் மகளார் நக்கண்ணேயார் என்னும் பெயரிய மாதராரைக் காதலிக்கவும் செய்துவிட்டன. இவனது தோற்றப்