பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவற்பெண்டு

பொலிவினையும், வீரச் சிறப்பையும், அடிபுனே தொடு கழல் மைஅணற் காளே என்று இவ்வம்மையாரே சிறப் பித்திருக்கின்றனர். இத்தொடரின் பொருள், 'வீரக் தண்டை அணிந்த கரிய மீசையையுடைய காளே போன்ற வீரன்’ என்பது.

நக்கண்ணேயார் புலவரும் ஆவார். இவ்வம்மை யாரின் புலமை இச்சோழனேக் காதலித்துப் பாடிய மூன்று பாடல்களால் அறியவருகின்றது. இப்பாடல் கள் வழியே நக்கண்ணேயார் கோப்பெரு நற்கிள்ளியைக் காதலித்தனர் என்பது தெரிகிறது. இவ்வம்மையார் இவன் மல்லனெடு பொருதபோது, மறைந்து கின்று அக்காட்சியினைக் கண்டு களித்தனர். அவன்மாட்டுக் கொண்ட காதல் காரணமாகத் தம் உடம்பு பொன் னிறம் போலத் தேமல் பரவும் நிலையினையும் உற்றனர். இதனை இவ்வம்மையாரே, யாமே, புறஞ்சிறை இருங் தும் பொன்அன் னம்மே என்று பாடியிருப்பதால் அறி கிருேம். தேமல் கிறம் பொன்னிறம் ஆதலின், ‘பொன் அன்னம்மே' எனப்பட்டது. இவ்வம்மையார் தம் மேனி தேமல் படரும் கிலேயில் மட்டும் இன்றிக் காதலால் மெலிங்து, வளைகள் கழலும் நிலையினையும் உற்றனர். தாம் காதலித்த சோழனைப் போர்க்களத்திலே சென்று தழுவலாம் என்றும் எண்ணினர். ஆல்ை, அவ்வாறு செய்தற்கு அஞ்சினர். அவ்வச்சம் அங்கிருந்த அவை யினர் என்னவென்று கூறுவரோ என்பதல்ை எழுந்த அச்சமாகும். இதனையும் இவ்வம்மையார், அடுதோள் முயங்கல் அவைகாணுவலே' என்று தம் பாடலில் குறிப் பிட்டிருப்பதால் உணரலாம். தம் வளே கழன்றது குறித் துத் தாய் என்னசுறுவளோ என்றுகூட இவ்வம்மையார்