பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3} கட்டுரைக் கொத்து

அஞ்சியுள்ளனர் என்பதும் அறியவருகிறது. தொடி கழித் திடுதல் யான்ஆய் அஞ்சுவல் என்ற அடியைக் காண்க.

உலகம் பலவிதம். ஒருமித்த கருத்தைக் காணுதல் அரிது. இங்கிலேயினேக் கோப்பெரு நற்கிள்ளியின் வாழ்க் கையில் காணலாம். இவன் மல்லனெடு பொருதான்; வெற்றியையும் பெற்ருன். இவ்வெற்றி குறித்து ஒரு சாரார், இவனது வெற்றி அன்று என்றும், மற்ருெரு சாரார் இவனது வெற்றிதான் என்றும் கூறினர். இதனே'ஆடு ஆடு என்பர் ஒருசாரார் ஆடு அன்று என்பர் ஒருசாரார்' என்றதனால் அறிக. ஆடு என்னும் மொழி வெற்றி என்னும் பொருளேச் சுட்டி நிற்கின்றது. இவ் வம்மையார்தம் கருத்து, அவன் வென்ருன் என்பதே. அதனைத் தாம் நேரில் கண்டதாகவும் கூறுகிருர். 'யான் கண்டனன் அவன் ஆடாகுதலே' என்ற அடியினைக் காண்க.

இவ்வாறெல்லாம் நக்கண்ணேயார் பா ராட் டி என்ன பயன் ? கோப்பெரு கற்கிள்ளி இவரை மணங் தான் என்ற குறிப்பை அறிதற்கு இல்லை. இவ்வம்மை யார் அவனைக் காதலித்த குறிப்புத்தான் பெறப்படு கின்றதே அன்றி, அவன் இவ்வம்மையாரை விரும்பிய குறிப்புக் காணப்படவில்லே.

'என்னே காவற்பெண்டு என்ற தலைப்பில், மற் ருென்று விரித்தல் என்ற வகையில், போர வைக் கோப் பெரு நற்கிள்ளியின் சிறப்பே பேசப்பட்டதே ' என்று கருதவேண்டா. காவற்பெண்டின் சிறப்பினே முற்ற முடிய உணரவேண்டுமானல், கோப்பெரு நற்கிள்ளி