பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவற்பேண்டு 125

யைப்பற்றித் தெரிந்தே ஆகவேண்டும். இவனது வெற் றிக்கும், வீரத்திற்கும், உடற்பொலிவிற்கும் இவ்வம்மை யார்தாம் காரணர் எனில், அஃது உண்மையாகுமே அன்றி, வெறும் புகழ்ச்சி ஆகாது.

இவ்வம்மையார் வீரக்குடி மரபினர். அம்மரபினர் என்பதை இவரது பாட்டே அறிவித்துக்கொண்டிருக் கிறது. அப்பாட்டில் வீர உணர்ச்சி மிக்க உரைகளே பொருங்தியுள்ளன. இவரது பாட்டிற்குத் திணைவகுத்த புறங்ானூற்று உரையாசிரியர், ஏருண் முல்லே' என்று குறிப்பிட்டுள்ளனர். 'எருண் முல்லேயாவது, எதிர் இல்லாதபடி ஆண்மைத்தன்மை மேன்மேல் ஏருகின்ற குடி ஒழுக்கத்தினே உயர்த்திச் சொல்லுதல் என்பதாம். 'மறம் கனலும் எருண்குடி' என்பர் புறப்பொருள் வெண்பாமாலே என்னும் நூலின் ஆசிரியர். இத்தகைய வீரக்குடியில் தோன்றிய காவற்பெண்டு தாம் பாது காத்து வந்த கோப்பெரு கற்கிள்ளிக்கு இளமை முதற் கொண்டே வீரத்தையும் ஊட்டி வளர்த்திருப்பர் அல்லரோ ? உடல் வளத்தையும் உணர்ந்து வளர்த்து வந்திருப்பர் அல்லரோ ? ஆகவே, இவ்வம்மையாரின் வளர்ப்பின் சிறப்பே கோப்பெருநற்கிள்ளியின் வெற்றிச் சிறப்பிற்குக் காரணம் என்பதில் ஐயம் உண்டா ? இல்லே.

பிள்ளைகளின் போக் கி ற்கு த் தாய்மார்களே காரணம் என்பது பண்டும் இன்றும் உணர்ந்துவரும் ஒர் உண்மையாகும். சிவாஜி மன்னர் பெருவீரராய் விளங்கியதற்குக் காரணம், அம்மன்னர் தம் குழங்தைப் பருவத்தில் வளர்க்கப்படும் போதே இராமாயண, பாரதக் கதைகளே க் கேட்டு வந்த பயனே ஆகும். அக்