பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 கட்டுரைக் கொத்து

கதைகளில் பேசப்படும் இராமனது வீரம், அருச்சுன னது வெற்றிச் சிறப்பு ஆகியவைகளே சிவாஜி மன்ன ரைப் பெருவீரராகச் செய்தன. இன்றுகூடச் சப்பான் நாட்டில் தம் பிள்ளைகளுக்கு வீரர்களுடைய வரலாறு களேயே பெரிதும் தாய்மார் கூறித் தம் பிள்ளைகளே வீரர்களாகத் திகழச் செய்கின்றனர் என்பது வரலாற்று உண்மை. ஆகவே, காவற்பெண்டு கோப்பெரு நற் இள்ளியை வளர்த்தமையால்தான் அவன் வீரய்ைத் திகழ்ந்தான்.

இனி இவ்வம்மையார் புலவர் என்பதனையும், வீரக் குடியினர் என்பதையும் அறிவோமாக. இவ்வம்மை யார் பாடியதாக ஒரே பாடல் புறநானூற்றில் காணப் படுகிறது. அப்பாடலின் பொரு ட் செறிவையும் இனிதின் நுகர்வோமாக.

இவ்வம்மையாரின் இல்லம் பேரிங்த ஒருவனே ஒருத்தியோ இவர்தம் இல்லின் தாணப் பிடித்துக் கொண்டு, அம்மையிர் ! உங்கள் மகன் யாண்டுளன்? என்று வினவ, அதுபோது இவ் வம் ைம யார் விடுத்த விடை 'என் மகன் எங்குளன் என்ரு வினவு, கிருய் ! அவன் எங்குளன் என யான் அறியேன். என்ருலும், அவன் இருக்கும் இடத்தை ஒருவாறு என்னல் அறிவிக்க இயலும். அதாவது அவனைப் பெற்ற வயிறு இது. அவனேக் காண விழைந்தால் போர்க்களத்திற்குச்சென்ருல் காணலாம். அங்குத்தான் அவன் தோன்றுவான்’ என்பதாம். இங்ங்னம் கூறும் போது, தன் மகனது வீரத்தை ஒர் உவமை கூறி அறி வித்ததை நாம் பாராட்டாமல் இருக்க இயலாது. அதாவது, தம் மகனைப் புலியாக உவமிக்கிருர்: தம்