பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. அழகைத் துறந்த அணங்கு

அழகு என்பது ஒரு பண்பு. .இதனே எய்த விழை யாதவர் எவரும் இலர். இது செயற்கை அழகு, இயற்கை அழகு என இரு பாலாகி இயலும் என்ப. இயற்கை அழகு எய்தப்பெருதவர் செயற்கை எழிலே யேனும் சேர்க்க விழைவர். இத்தகைய அழகை ஆண் பெண் என்னும் இருபால்களுள் பெண்பாலரே மிகுதியும் பெற்றவர். அஃது அவர்கள்பால் இயற் ைகயி ல் அமைந்த ஒரு தனி இயல்பு. அதேைலயே அவர் மாதர் என்னும் மாபெரும் சொல்லாலும் குறிக்கப்பெறுவார் ஆயினர். மாது என்னும் குற்றுகரச் சொல். மாதர் என்னும் ஈற்றுப் போலிச் சொல்லாக அமைந்து வழங் கப்படுகிறது. மாது என்பது அழகு என்னும் பொரு ளுடைய சொல்லாகும். மாதர் பிறைக் கண்ணி என் னும் ஆட்சியைக் காண்க. ஆகவே, மாதர்கட்கே இயற்கையில் அமைந்த அழகினைத் துறத்தல் என்ருல், அஃது எத்துணேச் சீரிய குணமாக இருக்கவேண்டும் என்பதைச் சிந்திக்கவேண்டாவோ? அவ்வாறு துறந்த தூய்மையர் யாரேனும் உளரோ எனில், உளர் என் பதை உணர்த்தவே இக்கட்டுரை எழுந்த தென்க.

நால்வகை மரபினருள் வணிகர் ஒரு மரபினர். இம் மரபினருள் பெருங்குடிப் பிரிவினர் ஒரு வகையினர். இப்பெருங்குடி மரபில் தனதத்தனர் என்னும் தன வந்தர் தோன்றி இருந்தார். இவர் தொல்பதியாகிய காரைக்கால் என்னும் ஊரில் கண்ணியமாய் வாழ்ந்து வருதனா.