பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகைக் துறந்த அணங்கு 129

காரைக்கால் வணிகர், பொதுவாகத் திரைகடல் ஒடியும் திரவியம் தேடும் திருவினர்; மானமிகு தருமத் தின் வழிகிற்பவர்; வாய்மையில் ஊனமில்லவர். இவர் கள் தம் வாணிபத்தைப் பெருக்கக் கடல் கடந்து செல் வதும் மீளுவதும் ஆய செயலே மேற்கொண்டவர்கள்.

காரைக்கால் நகரில் வாழ்ந்த தனதத்தனர் தமக் குத் திருமடங்தை தோற்றம்போல் ஒரு பெண் மகவு தோன்றியது. அம்மகவைப் பாராட்டிச் சீராட்டி வளர்த்து, புனிதவதி என்னும் பெயரைச்சூட்டி அழைப் பார் ஆயினர். அம்மகவும் பொங்கிய பேர் அழகுமிகு புனிதவதியார் எனத் திகழ்ந்தார். புனிதவதியார் தெய் வங்களால் காக்கப்பட்டுச் செங்கீரையாடி, சப்பாணி கொட்டி, தாலும் ஆட்ட, முத்தம் ஈந்து, வருகை பயின்று, அம்புலி அழைக்க, அம்மானையாடி. ஊசல் பயின்று, ரோடும் கிலேயும் அடைங்து வளரலாயினர். இவ் இம்மை ஆட்டங்களுடன் அம்மைக்குரிய ஆட் டத்திலும் பயிற்சி பெற்று வந்தனர். வண்டல் பயில் வனஎல்லாம் வள ர் மதியம் புனேங்த சடை அண்டர்பிரான் திருவார்த்தை அணைய வருவன பயின்று வங்தார். இவ்வாறு இவ்வம்மையார்தம் இளமைப் பருவத்தில் பயின்று வந்ததை கினேவில் கொண்டே பின்னல் தாம் பாடிய அற்புதத் திருவங்காதி என்னும் நூலின் முதல் பாடலிலேயே,

பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதற் சிறந்துகின் சேவடியே சேர்ந்தேன்

என்று பாடி மகிழ்ந்துள்ளார். அப்பாட்டின் குறிப்புக் கொண்டே பாவலர் பெருந்தகையார் சேக்கிழாரும் அம்

9