பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 கட்டுரைக் கொத்து

மாதரசியாரின் இளமை நிகழ்ச்சிகளைப் பாடிக் களித் துள்ளார்.

இவ்வாறு அறிவாலும் திருவாலும் உருவாலும் சிறந்த புனிதவதியார் கன்னிப்பருவத்தையும் கவினுறப் பெற்றனர்.

புனிதவதியார் மணப்பருவம் உற்றதைப் புலவர், இல்லிகவாப் பருவம்' என்று இயம்பி இருப்பது, நம் நாட்டு மாதர்களின் பண்பை விளக்குவதோடு, நாகரிக முறைபையும் எடுத்துக் காட்டுவதாகும். தனகத்தனர் திருமகளார் மணப்பருவம் உற்று மாண் புற விளங்கு வதைக் கேள்வியுற்ற கிதிபதி என்னும் பெயரிய வணிகர் தம் தனயனுக்கு அங்கங்கையை மணமுடிக்க எண்ணம் கொண்டார். அதனைப் பேசி முடிக்கப் பேரறிஞர்கள் சிலரைக் காரைக்காலுக்கு அனுப்பினர்.

வந்த முதியோர்களும் தனதத்தருைம் மண மக்களது குணம் பேசிக் குலம் பேசிக் குறித்த நாளில் கடிமணம் இயற்ற முடிவும் செய்தனர். மண விழவு, குறிப்பிட்ட மங்களால் ஒரைதனில், புனிதவதி யார் தமக்கும் பரமதத்தன் தனக்கும் தெளிதரு நூல் விதிவழியே செய்து முடிக்கப்பட்டது. இம்மணவினே யைக் கண்டு கேளிரும் கிளைஞரும் கனிமிக மகிழ்ந்தனர். புனிதவதியார் மயில் போலும் பரமதத்தன் காளை போலும் விளங்கினர். இந்த முறையில் இம்மணமக் கள் விளங்கித் திருமணம் முடிக்கப்பெற்றனர் என் பதைச் சேக்கிழார் பெருமானர்,

தளரடிமென் நகைமயிலைத் தாதவிழ்த்தார்க் காளைக்குக் களிமகிழ்சுற் றம்போற்றக் கல்யாணம் செய்தார்கள்