பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f34 கட்டுரைக் கொத்து

உண்டு மகிழ்ந்த இன்முகங் கண்டு அம்மையாரும் ஈத் துவக்கும் இன்பத்தில் திளைத்திட்டார். வந்த விருங் தினரும் அம்மை யாரை வாழ்த்திச் சென்றனர்.

பரமதத்தன் உற்ற பெரும் பகலின்கண் ஓங்கிய பேர் இல் புகுந்தனன். பொற்புற நீராடினன். உடனே நேரே அடிசில் அகம் புகுந்து உணவுண்ணத் தொடங்கி ன்ை. உணவு கொள்ளுதற்கு முன்பு பரமதத்தன் செய்த செயல்கள் இவைதாம் என்பதைச் சேக்கிழார் குறிப்பிட்டனர். ஈண்டுப் பரமதத்தன் பண்பாட்டைப் படம் பிடித்துக் காட்டுகிருர் பாவலர். பரமதத்தன் நீராடிய பின்பு பூசுவன பூசிப் போற்றுவன போற்றும் பொறுப்பு அற்றவன் என்பது நீராடியதும் நேரே உணவுகொள்ளப் புக்கமையிலிருந்து ஆணித்தரமாக விளங்குகிறது. ஆகவே, அன்னன் இயல்புக்கும் அம்மை யார் பண்புக்கும் எத்துணை வேற்றுமை காணக்கிடக் கிறது . இதல்ை அவனேக் காளேக்கு உவமையாகக் கூறியது பொருத்தமன்ருே ?

பரமதத்தன்முன் பரிகலம் திருத்திப் புனிதவதியார் உணவு பரிமாறினர்; அடியவர்க்கு இட்டபின் எஞ்சி இருந்த மாங்கனியைப் பரிகலத்தில் வைத்தனர். கண வரும் மகிழ்வுடன் உண்டலேக் காண நுண்ணிதின் மகிழ்ந்தது ஒண்ணுதல் முகனும். பரமதத்தன் மனேவி யார் படைத்த மதுரமிக வாய்த்த மாங்கனியைச் கவைத்தான். அச்சுவையை மேலும் சுவைக்க இனேய தொரு பழம் இன்னும் உளது. அதனேயும் இடுக என இயம்பின்ை. பழம் சுவையாயிருந்தது. அச்சுவையைத் தன் வாழ்க்கைத்துனேவியும் துய்க்கவேண்டுமென்று எண் ணின்ை அல்லன் காளே வணிகன். தோன்றற்கும்