பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகைக் துறந்த அணங்கு 137

கையில் வந்துற்றது. அதனைத் தம் கணவர்தம் கை யகத்து இட்டுக் களித்தனர். அதனை வணிகன் கயப் புடன் நோக்குகையில், அஃது அவன் கையினின்று கரங்து ஒழிந்தது. கைக்கனி கரக்கவே, காளேயாம் வணிகன், அச்சமும் துணுக்கமும் அகத்துக்கொண் டான். அக்கணமே அம்மையார் ஒர் அணங்கு என்று உளத்துள் உன்னினன். மனேவி என்பதை மறந்தும் போளுள். ‘இனி இம்மாதுடன் வாழ ஒருப்படேன்’ என்று உளத்தில் கொண்டவனுய், ஒருவும் எண்ணமே ஓங்க இருந்தான். நடந்த செயலே எவர்க்கும் நவின்ரு னும் அல்லன்.

திரைகடல் ஒடித் திரவியம் தேடும் வழக்கமுடைய மரபினைச் சார்ந்த வணிகன் ஆதலின், அதனேயே ஏது வாக அகத்துள் கொண்டு ‘பரவைtது படர்கலம் செலுத்திப் பணத்தைத் தேடப்போகின்றேன்' என்று பாவையார்க்குப் பகர்ந்து வங்கம் ஏறி வழிக்கொள்ள லான்ை. புனிதவதியாரும் கணவர் புகன்றது பொய் யுரை அன்று. மெய் உரையே என்று உளத்துக் கொண்டு உத்தரம் கொடுத்தனர்.

வேலையைக் கடந்து வேற்று நாட்டகம் விரைந்து சென்ற வணிகனும், வாணிகம் செய்து செல்வம் பலவும் சேரத் திரட்டித் திரும்பினன். செல்வம் திரட்டிய பரமதத்தன், காரைக்காலுக்குள் கால் வைக்கவும் கூசின்ை: அச்சமும் கொண்டான். ஆகவே, காசுடன் சென்று கன்னி நாட்டினை அண்மினன். அடைந்தவன் யாது செய்தனன் வாளா இருந்தனனே ? இல்லை. திரட்டிய செல்வத்தை நிதி சேமிக்கும் இடத்தில் உய்த் தனன். 'பொருள்தனைப் போற்றி வாழ்' என்னும்