பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 கட்டுரைக் கொத்து

துணேப் பொருத்தமுடையது என்பதைச் சிந்திக்க வேண்டாவோ ? அச்சிந்தனையின் முடிவு யாதாக முடியும் ? இது பொருந்திய மணம் அன்று; பொருந்தா மணமே என்பதுதானே போதரும்? அதனை முன் கூட்டி அன்ருே தொண்டர்சீர் பரவும் தோமில் புலவர், 'தளிரடிமென் நகைமயிலேத் தாதவிழ்த7ர்க் காளேக்குக் களிமகிழ் சுற்றும்போற்றக் கல்யாணம் செய்தார்கள்’ என்று உவமை முகத்தால் உணர்த்திக் காட்டினர் ?

க ண வரி ன் சொல்லேயும் செயலையும் கூர்ந்து நோக்கினர் புனிதவதியார். புனிதவதியார் அகத்து அழகுடையர் போலப் புறத் தும் அழகுடையவர். அருண்மொழித்தேவர், அம்மையாரைக் குறிக்கும்போ தெல்லாம் அம்மையாரது கவின் பொலியவே கவியும் பாடுகிருர். 'திருமடங்தை அவதரித்தாள் எனவந்து, பொங்கியபேர் அழகுமிகப் புனிதவதியார் பிறந்தார்’ எனப் பிறப்பைப்பற்றி மொழிந்தார் முன்னே. அணி கிளர் மெல்அடி' என்று திருவடியைப் புனேங்தனர். "அழகின் கொழுந்து எழுவதென வளர்வார்' என்று வளர்ப்பை வரைந்தார். 'துசுப்பு ஒதுங்கு பதம்’ என்று இடையின் அழகை இயம்பிப் போந்தார்; நல்லஎன உறுப்பு நூலவர் உரைக்கும் நலம் நிரம்பி மல்கு பெரு வனப்புமிக் கூரவரு மாட்சி என உறுப்பழகு அனைத் தினையும் ஒருங்கே உரைத்திட்டார். தளிரடி மென் னகை மயில்' என்று சாயல் அழகைச் சாற்றி முடித் தார். பூப்பயில்மென் குழல் மடவார் மணமலியும் மலர்க்கூங்தல் மாதரார் பூங்குழலார்' என்று கூந்தல் சிறப்பைக் கூறிப்போங்தார்.