பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுடைக் கருத்தன்று அறனுடைக் கருத்தே. வீர முள்ள இடத்தில்தான் ஈரமும் நன்கு துலங்கும். இது குறித்தே திருவள்ளுவப் பெருங்தகையார்.

'அறத்திற்கே அன்புசார்பு என்று அறியார்

மறத்திற்கும் அஃதே துணை என்றனர்.

நாம் எங்கே வீரம் உள்ள இடத்தில் ஈரம் இராது எனப் பிறழ உணர்ந்து விடுவோமோ என்ற கவலையி ல்ைதான், செங்காப் போதார் இங்ங்னம் செப்பிச் சென்ருர். இதனை விளக்கிக்காட்டவே தெய்வப்புலவர் சேக்கிழார் பெருமாருைம்,

ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே

பாரம் ஈசன் பணியலா தொன்றிலார்

ஈரம் அன்பினர் யாதும் குறைவிலர்

வீரம் என்னல் விளம்பும் தகையதோ ? என்றனர்.

அடுத்த காட்சியாக ஆசிரியர், அன்பு மறவரது தோற்றப் பொலிவை நம் கண்முன் காட்ட விழை கிருர். வீரர் செருப்பு, உடைவாள், அரைக்கச்சு முத லானவற்றைப் புனேங்த தோற்றத்தினை,

போழ்வார் போர்த்த காழகச் செருப்பினன் குருதி புலராச் சுரிகை எஃகம் அரையில் கட்டிய உடைதோல் கசசையன் தோல்கெடும் பையில் குறுமயிர் திணித்து வாரில் வீக்கிய வரிக்கைக் கட்டியன்

என்று சொல்லால் எழுதிக் காட்டியுள்ளனர்.