பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகைத் துறந்த அணங்கு 145

மறவாமை வேண்டும்; இன்னும் வேண்டும்கான்

மகிழ்ந்து பாடி அறவாங் ஆடும்போதுன் அடியின்கீழ் இருக்க' என் ருர்’

இறைவரும் இவ்வரங்களே ஈந்ததோடு கில்லாது, "திருவாலங்கா டென்னும் திருப்பதியில் நீ சென்று எம் ஆனந்தக்கூத்தினைக் கண்டு அகங்களிக்கப் பாடுவாய்' என்றும் பணித்திட்டார். அப்பணி தலைமேற்கொண்டு அம்மையார் தலேயால் கடந்து திருவாலங்காடடைக் தார் , அண்டமுற கிமிர்ந்தாடிய ஆனந்த நடனம் கண்டார்; அகத்தானந்தம் புற த் துப் பொழிவது போல், மூத்த திருப்பதிகம் மொழிந்திட்டார். இவர் பாடிய நூல்களே பின் வந்த புலவர்கள் பரணி பாடு தற்குப் பெருங்துனே செய்தன என்று கருதவேண்டி உளது. இவர் பாடல்கள் அலகை யாட்டங்களையும், இடு காடு. சுடு காடு இயல்புகளையும் இனிது எடுத்து இயம்பவல்லன. இவையே அதற்குக் காரணம். இவ் வம்மையாரது திருப்பாடல்கள் சைவத்திருமுறை பன் னிரண்டனுள் பதினேராம் திருமுறையில் இலகும் பெருமையுடையன.

இவ்வம்மையார், புனிதவதியார் என்று தம்மைத் தாம் பாடிய பாடல்களில் குறித்துக்கொள்ளாமல், யாண்டும் காரைக்காற் பேய்' என்று குறிப்பிடுவ தால், அம்மையார் பேய் வடிவு பெற்றதை ஐய மின்றி அறுதியிட்டு உறுதியாகக் கூறலாம்.

சுந்தரரும் இவ்வம்மையாரைப் பேயார்' என்றே குறித்துள்ளார். அம்மையார் தம்மைக் காரைக்காற் பேய் என்று குறிப்பதனால், இவர் காரைக்காற் பதியில் பிறந்தார் என்பதும் அறியக்கிடக்கிறது.

Í 0