பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 கட்டுரைக் கொத்து

மும் கண்ட சிவகோசரியார், மலினங்களை நீக்கித் தமது பூசனையினை விடாது செய்துவந்தனர். இதல்ை இவ ரைக் கல்லாடனர் "நீங்காக் குணத்துக் கோசரி' என்றனர். சிவகோசரியார் என்பது முதற்குறையாக வும், கடைக்குறையாகவும் அமைந்து கோசரி என கின்றது.

சிவகோசரியார்க்கு வேடனர் செய்யும் பூசை அனுசித பூசையாக இருந்தது. அவர் அது குறித்து வருத்தமே உற்ருர். இவ்வருத்தத்தை நீக்கித் திண்ண ஞரின் அன்பினே அவர்க்கு உணர்த்த இறைவர் எண்ணி ஞர் என்பதை அறிவிக்க ஆசிரியர்,

கோசரிக் கன்றவன் நேசம் காட்ட முக்கண் அப்பனுக் கொருகணில் உதிரம் தக்கி ணத்திடை இழிதர என்று கூறியுள்ளனர். இங்கிலேயில் திண்ணனர் உற்ற நிலையினை ஆசிரியர் 'அக்கணம் அழுது விழுந்து தொழுது எழுந்து அரற்றி' என்று பாடிக்காட்டி அறிவிப்பா ராயினர். இதனினும் திண்ணனர் உற்ற துன்புறு கிலேயினை இத்துணைச் சுருங்கிய அளவில் காட்ட இயலுமோ? இதனினும் சொல்லவும் வேண்டுமோ ? "இங்ங்னம் திண்ணனர் செய்ததா மறம்? அதுவும் திருமறமா?' என்று சிலர் எண்ணலாம். திண்ணனரது மறத்தினத் தொடக்கத்தில் ஆசிரியர் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

வேங்கை வென்று வாகை குடிய சங்கரன் தன் இனத் தலைவன் என்று குறிப்பாகவும், 'கணேயில் வீழ்த்துக் கருமா அறுத்து’ என வெளிப்படையாகவும் குறித்துள்ளனர்.