பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமறம்

போனகம் கொணர்ந்தார்" என்பது மட்டும் பேசப்பட் டுள்ளது. இந்த நூலில் திண்ணனர் என்ருே, கண் ணப்பர் என்ருே ஒரு பெயரும் காட்டப்பட்டிலது, திருவேட்டுவர் என்றுதான் இந்நூல் குறிப்பிடுகிறது.

இந்நூலில் ஒர் அரிய போக்குக் காணப்படுகிறது. அதாவது பெற்ருேர் பெயர்களையோ, கன்னி வேட்டைச் செயலேயோ உடன் சென்ற நாணன், காடன் என்பவர் களேப்பற்றியோ குறிப்பிடாமல் மிகச் சுருங்கிய அள வில் இக்காலத்தில் (Synopsis) என்று கூறப்படும் முறையில் கண்ணப்பர் வரலாறு கூறப்பட்டுள்ளதாகும். இதல்ை நம் செங்தமிழ்ப் புலவர்கட்கு ஒன்றைச் சுருக் கவோ பெருக்கவோ இயலும் என்பது புலகிைன்ற தன்ருே !

இத்தகைய அரிய பெரிய கருக்துக்களேத் தன் னகத்துக்கொண்ட திருக்கண்ணப்பர் தேவர் திருமறம் சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள், பதினேராம் திருமுறையில், ஒரு நூலாகத் திகழ்ந்துகொண்டிருக் கிறது என்பதை முன்பே குறிப்பிட்டோம். ஆகவே, திருமுறைகளே வெறும் சமய நூல் என எண்ணுது, எச்சமயத்தவரும் படித்தறியவேண்டிய இலக்கிய நூல் என்பதை நாம் அறிதல் இன்றியமையாததாகும்.