பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் 29

னம் பல அழகு தோன்றக் குறிஞ்சிப் பகுதியைப் பாடி யுள்ளார் கபிலர்.

கபிலருக்குக் குறிஞ்சித் திணையைப் பாடுவதில் பெரு விருப்பம் போலும் ! கலித்தொகை என்னும் நூலிலும் இருபத்கொன்பது கவிகளைப் பாடியுள்ளார். 'கற்ருர் ஏத்தும் கலி' என்ற சிறப்பே கலித்தொகைப் பாடலின் நயத்தைப் புலப்படுத்தும். அதிலும் கபிலர் போன்ருர் பாடலில் நயங்கட்குக் கேட்கவாவேண்டும்? அக்காலத்தில் அரசர்கள் பொய் கூருர் என்பதை, வற்புறுத்திக் கூறுகையில்,

குன்றக கல்நாடன் வாய்மையில் பொய்தோன்றில் திங்களுள் தீத்தோன்றி அற்று'

என்று எடுத்து மொழிந்துள்ளார்.

யானைகள் நீர் பருக நீர் கிலேகட்கு அழைத்துச் செல்லுங்காலத்து வாளா யானைகளே ஒரு வழியே நடத்திச் செல்லாமல், வேழங்கட்கு முன் பறை அறைந்து தெருவில் விளையாடும் இளஞ்சிருர்களும். நடமாடும் ஏனையோர்க்கும் யானைகளால் யாதோர் இடையூறும் உருதிருக்க அழைத்து ஏகவேண்டும் என் அறும், இதனை மறவாது அரசர்கள் பாகர்க்கு அறிவித் திருக்கவேண்டும் என்றும், இங்ங்ணம் செய்யா வேங்தன் தவறுடையன் என்றும் கபிலர். குறிஞ்சிக்கலியுள் நன்கு புலப்படுத்தியுள்ளார். இதனே,

'நிறை அழி கொல்யானே நீர்க்குவிட் டாங்குப்

பறை அறைந்து அல்லது செல்லற்க என்ன இறையே தவறுஉடை யான்'