பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் 35

றனர். இதல்ை இவர் பாரியின் கொடையினை எத் துணையளவுக்கு உயர்த்திப் பேசியுள்ளார் என்பதைப் பாருங்கள் ! பாரியின் கொடைச்சிறப்பை இகழ்வது போலப் புகழ்ந்து பேசுகையில்,

'பாரி ஒருவனும் அல்லன்

மாரியும் உண்டுஈண்டு உலகு புரப்பதுவே"

என்றனர்.

கபிலரால் பாடப்பட்ட பெருமை சான்றவர்களுள் மலேயமான் திருமுடிக்காரியும் ஒருவன் ஆவான். இவ னது கொடையை கினேங்து நாலாபக்கங்களினின்றும் பரிசில் மாக்கள் பரந்தோடி வருவர் என்பதை ஒரு திசை ஒருவனே உள்ளி நால்திசைப் பலரும் வருவர் பரிசில் மாக்கள்' என்று கபிலர் இவனேப்பற்றிக் கூறி யுள்ளார். இவன் எவர்க்கும் ஒருபடித்தாகவே ஈந்த ஒப்பற்ற வள்ளல் என்ருலும், புலவர்மாட்டுச் சிறிது வேறுபாடு காட்டி மிகுதியாக ஈதல் வேண்டும் என் பதை அறிவுறுத்தி இவனே நோக்கி, பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே' என்று பாடினர் கபிலர். இதல்ை புலவர்கள் தனிச்சிறப்புடையவர்கள் என்ப தைக் குறிப்பாக உணர்த்தினர் கபிலர். திருமுடிக்காரி தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த காரணத் தால் இவனது நாடு இயற்கை அழிவும் செயற்கை அழிவும் எய்தாது என்பதை உளமாரக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். இதனே,

'கடல்கொளப் படாஅது உடலுகர் ஊக்கார்

கழல் புனே திருந்தடிக் காரிகின் நாடே 11 என்ற அடிகளில் காண்க.

3