பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கட்டுரைக் கொத்து

யும் எடுத்துக்காட்டலாம். பாரியின் பறம்பு மலே மூவேந்தரால் முற்றுகை இடப்பட்டு இருந்தபோது, உள்ளிருப்பார் வெளியிலும் வெளியில் இருப்பார் உட் புறமும் போய்வர வசதி இல்லாமல் போனதால் பறம்பு மலேக்குள்ளிருப்பார்க்கு உணவு முட்டுப்பாடு உண் டாயிற்று. அந்தக்காலத்தில் கிளிகளேயும் குருவிகளையும் வளர்த்து அவற்றின்மூலம் நெற்களைக் கொணருமாறு செய்து உள்ளிருந்தாரை உண்பித்து வந்தனர். இவர் இங்ங்னம் செய்த செயலே நக்கீரரும் ஒளவையாரும் கூடக் குறிப்பிட்டுள்ளனர்.

இவரது பாடல்களில் பலப்பல அரிய கருத்துக்கள் காணக்கிடைக்கின்றன. தலைவி ஒருத்தி தன் அன் புடைத் தலைவனை கணவன் செய்வன யாவும் இன்பக் தருவன என்றும், அவன் இன்ன செய்யினும் அது விண்ணுலக இன்பத்தினும் சிறந்தது என்றும் கூறும் பகுதி கற்புடை கங்கையின் கடப்பாட்டைக் காட்டும் இடம் அன்ருே? மாதர்கள் தம்தம் கணவன்மார் இடத் தில் வைத்த அன்பினே அவர்கள் தம் தாய்மார் வீட்டில் இருந்து உண்ணும் பால் உணவிலும், தம் கணவன்மார் குடிசையில் உண்ணும் நீர் உணவையே சீரியதாகக் கரு தினர் என்று கூறியுணர்த்தினர். இன்னேர் அன்ன கருத் துக்களைக் கபிலரது பாடல்களில் நீங்களே படித்து உணர்வீர்களாக. இவரது செய்யுள்கள் இனிமையுடை யன என்பதைக் கபிலரது பாட்டு என்று கூறப்பட்டு வரும் தொடர் மொழியிலும் நன்கு உணரலாம்.

இவர் இன்ன காற்பது என்னும் நீதிநூல் ஒன்றை யும் பாடியுள்ளார். அது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் இணைக்கப்பட்டுள்ளது. கபிலம் என்னும்