பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் 37

நூ லும் இவரால் பாடப்பட்டது என்பதும் தெரிய வருகிறது.

திருவள்ளுவரையும் அவர் செய்த நூலேயும் போற் ருத புலவர் இலர். ஆகவே, கபிலரும் திருக்குறளைச் சிறப்பித்துப் பாடிய பாடல் திகுவள்ளுவமாலே என்னும் நூலில் உள்ளது. அந்நூலில், திருக்குறள் நூலில் உள்ள பாக்கள் குறள் வெண்பாவாலானவை ஆயினும், தம்முள் பெரிய கருத்துக்களைக் கொண்டுள்ளன என்று பாடியுள்ளார். .

இவரது தோழர் பாரியே என்ருலும், புலமை காரணமாகப் பரணர்தாம் இவருக்கு நெருங்கிய தோழர் ஆவார். அதனுல்தான், கபில பரணர் என்ற தொடரும் உலவி வருகிறது, இடைக்காடரும் கபிலர் கணபர் தாம். இதனைப் பின்னம்இல் கபிலன் தோழன் பெயர் இடைக் காடன் என்போன்' என்று திருவாலவாய் உடையார் திருவிளையாடற் புராணம் கூறுதல் காண்க.

இத்தகைய பெரியார் பெண்ணையாற்றங்கரையில் தீ வளர்த்து அதில் மூழ்கி உயிர் விட்டனர் என்பர். இது திருக்கோவளுர் சாசனம் ஒன்ருல் அறிய வருகிறது. இவர் உயிர் துறந்த இடத்தில் கபிலக் கல்' எனப்படும் ஒரு கல்லும் இருக்கிறது.