பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கட்டுரைக் கொத்து

கடைக் காப்பினுள் வரும் பூம்பாவைப் பாட்டாக' என்ற தொடரால் விளங்கும். போதியோ பூம்பாவாய்' என்று பாடல் தொறும் வரும் தொடரும் இதனே விளக்கி கிற்கிறது. இங்ங்ணம் பாடப்பட்ட பதிகத் துள் பதிைேரு பாடல்கள் உள்ளன. முதல் பத்துப் பாடல்கள் பதிகம் என்ற பெயர்க்கு ஏற்ப அமைந்து உள்ளன. இறுதிப் பாடல் திருக்கடைக் காப்பு என்ப தற்கு ஏற்பப் பதிகப் பயன் உணர்த்தும் பாடலாக அமைந்துள்ளது.

இப்பதிகத்தின் வாயிலாகப் பல அரிய பெரிய குறிப்புக்கள் நமக்குப் புலகிைன்றன. இதன் மூலம் திரு மயி லை யின் தனிச்சிறப்பும் அங்காட்டின் நீர் வளனும் கிலவளனும், மக்கள் இயல்பும் திருமயிலே ஆலயத்தில் கொண்டாடப்பட்ட திருவிழாக்களும், அடியார்கட்கு அன்னம் இட்டு அகங்களிக்கும் அருங் தொண்டும் தெரியவருகின்றன.

சென்னைத் திருமயிலையம்பதியின் முழுப்பெயர் மயில் ஆர்ப்பு ஊர் என்பது. இச்சொற்களைப் புணர்த்திக் கூறுங்கால் மயிலார்ப்பூர் என்று ஆகும். மயிலார்ப்பூர் என்பது நாளடைவில் மயிலாப்பூர் என்று வழங்கப் பட்டு, அதன்பின் மயிலே என மருவி வழங்கலாயிற்று. மயிலேயம்பதி சோலை மிக்க பதியாதலின். மயில்களின் ஆர்ப்புக்கு (ஒலிக்கு) இடமாயிற்று. மேலும், கற்ப காம்பிகை மயில் வடிவுகொண்டு கபாலிப்பெருமானப் பூசித்த காரணத்தாலும் இது மயிலாப்பூர் என்றும் ஆயது. இப்பதி புன்னேமரங்கள் நிரம்பப்பெற்றுக் கடற் கரைச் சோலேகளையுடையது என்பதை ஞானசம்பந்தப் பெருமானர் தமது பதிகத்தில் எடுத்த எடுப்பில் மட்