பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக விழாக்கள் 43

டிட்ட புன்னேயங்கானல் மடமயிலே' என்று கூறுமாற் ருல் தெளியலாம். மயில் குறிஞ்சிக் கருப்பொருளே ஆயினும் அது கானலில் (கடற்கரைச் சோலேயில்) உல வாமற் போயினும் புன்னே மரங்களில் வாழும் இயல்பு இருத்தலின் மயிலே மயில்கட்கு இடமாயிற்று என்க. இதல்ை திணைமயக்கம் கூறியவாறும் ஆயிற்று. மட மயில் என்ருர், ஆண்டு உள்ளார் இளையராய் எழி லுடையராய் இருத்தல் பற்றி என்க. திருமயிலேயின் கோயிற்பெயர் கபாலீச்சுரம்' என்பது. அது “கற்ருர் கள் ஏத்தும் கபாலீச்சுரம் என்னும் தொடரால் அறிய வரும் உண்மையாகும். இங்குள்ள மாதர்கள் மைதீட் டப்பட்ட கண்ணராய்க் கவினுடன் திகழ்வர் என்பதை யும் பதிகத்தில் காணலாம். 'மைப்பயந்த ஒண்கண் ம. கல்லார்’ என்றும், மைப்பூசும் ஒண்கண் மடகல்லார் என்றும் கூறும் அடிகளில் காண்க. அவர்கள் கண் மை தீட்டத் திட்ட ஒளி மங்காது, இக்காலத்தைப்போல மூக்குக் கண்ணுடியும் வேண்டாது திகழ்ந்தது என்பதை "ஒண்கண்' என்னும் தொடர் விளக்கி கிற்கிறது. அவர் கள் கைகள் வளையல்கள் அணியப்பட்டு வசீகரத்துடன் துலங்கின. இதனை ஞானசம்பந்தர் வளேக்கை மட கல்லார்’ என்று கூறிப் புலப்படுத்தினர்.

மயிலையம்பதி கடற்கரைப் பட்டினத்தைச் சார்க் தது என்பதைக் கானல் மடமயிலே' என்றும், ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை' என்றும் கூறும் ஆற்ருல் தெளியலாம். இஃது இங்ங்ணம் கடற்கரை அருகே இருத்தலால, அக்கரை அருகே வாழும் வலேஞர் கள் தம் குலத்தொழிலாகிய மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வேல் கொண்டு மீனே வெட்டி வீழ்த்திக்