பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கட்டுரைக் கொத்து

விளக்கி கிற்கும். நெய்யில்லா உண்டிப் பாழ்' ஆதலின் ஒண்புழுக்கல் மூடும் அளவுக்கு நெய்யை நிரம்ப ஊற்றி னர் என்க. இன்றேல் நெய்ப்பூசும் ஒண்புழுக்கல் என் பரோ (பூசும்-மூடும்) மூட நெய்பெய்து முழங்கை நெய்வார' என்றனர் பூரீஆண்டாள் அம்மையாரும். ஆக இதுவரையில் கூறிவந்த காரணங்களால் திருமயிலையில் அடியார்கட்கும் எழைகட்கும் உணவு அளித்து வந்த சிறப்பை ஒர்ந்தனம். இனி அடுத்தாற்போல அவ்வூரில் திருவிழாக்கள் மலிந்து கொண்டாடப்பட்ட சிறப்பினே யும் இனிச் சிங்திப்போமாக.

திருமயிலை விழாவுக்குப் பேர்போனது என்பதைத் தோணிபுரத் தோன்றலார் மலிவிழா வீதி மாமயிலே' என்றும், கலிவிழா என்றும் கூறும் ஆற்ருல் தெளிய லாம். இவ்விழா மக்களின் கலியை (வறுமையினே) நீக்கும் விழாவாதலின் கலி விழா என்றனர். பேர் ஆரவாரத்துடன் நடப்பது ஆதலின் கலி விழா' என் றனர் எனினும் அமையும். இவ்விழாக் காலங்களில் அருட்பாடல்கள், பக்திச்சுவைப் பாடல்கள் பக்தர்க ளால் பாடப்பட்டு வங்தன என்பதை பலி விழா ப் பாடல்செய்' என்றும் அறிவிக்கும் ஆற்ருல் உணர லாம். விழாவில் ஒரே இன்ப ஆரவாரம் நிறைந்திருங் தது என்பதை ஒலி விழா என்றும் பாடியிருப்பது கொண்டும் பார்த்துக்கொள்ளலாம்.

பொதுவாக விழாக்கள் மலிந்த மயிலே என்று குறிப்பிட்டதோடு கில்லாது, இன்னன்ன திருவிழாக் களும் அம்மயிலேயம்பதியில் நிகழ்த்தப்பட்டன, கொண் டாடப்பட்டன என்பதையும் சிரபுரச்செம்மல் செப்பிப் போங்தனர்.