பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக விழாக்கள் 49

இவ்விழாவும் தொன்றுதொட்ட விழாவாகும். இது பற்றிய குறிப்பும் சங்கநூலில் காணப்படுகிறது. இக் நாளும் மாதர்களுக்கே உரியதாகவும் அச்சங்க நூற் களைக்கொண்டு உணரலாம். -

'தாயருகா கின்று தவத்தைங்கீர் ஆடுதல்' என்பது பரிபாடல். தவத்தைங்ர்ே என்று சிறப்பிக்கப்பட்டது கொண்டு இவ்விழாவின் சிறப்பை ஒர்ந்து கொள்ள லாம். கடலாட்டு விழா என்பது மாசிமக விழா வாகும். இது மாசி மாத விழா என்பதை, மாசிக் கட லாட்டு' என்ற தொடர் பதிகத்தில் அமைந்து இருத்தல் கொண்டு அறிகிருேம், இதுவே முங்ர்ே விழவு எனப் புறநானூறு புகல்கிறது. இது மக நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது.

உத்திர விழா என்பது பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது. இவ்விழாவும் பழைய விழாவாகும். இதுபற்றிய குறிப்புக்களும் சங்க நூலில் உண்டு.

'உறங்தை யாங்கண்.......பங்குனி முயக்கம்' என்று அகநானூறு கூறுகிறது. தொடக்கத்தில் இவ்விழா வைப்பற்றி இறையனர் களவியல் உரையில் கூறப் பட்டிருத்தலேயும் கினைவு கொள்வோமாக.

அட்டமி நாள் விழா சித்திரை மாதத்தில் கொண் டாடப்பட்டிருக்கவேண்டும். பங்குனி விழாவிற்குப் பின் இவ்விழாக் குறிப்பிடப்பட்டிருப்பதல்ை இவ்வாறு ஊகிக்க இடன் உண்டு. இதுவரையில் குறிப்பிடப் பட்டு வந்த விழாக்கள் நட்சத்திரத்தை ஒட்டி @తాడు; இது திதியை ஒட்டியதாகும்.