பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கட்டுரைக் கொத்து

இந்த விழா பதினெண் கணங்களால் இறைவனே வழிபட்டுக் கொண்டாடப்பட்டது என்பது தெரிகிறது. திருஞானசம்பந்தர் இவ்விழாவினைக் குறிப்பிடும்போது பண்ணுர் பதினெண் கணங்கள் தம் அட்டமி நாள்' என்று குறிப்பிட்டுள்ளார். பொற்ருப்பு விழா என்பது பொன்னுரசல் விழாவாகும். இது வைகாசி மாதத்தில் கொண்டாடப்பட்டதாகத் தெரிகிறது. சித் திரை அட்டமி விழாவுக்குப் பிறகு இது குறிப்பிடப்பட்டது கொண்டு அறியவரும் குறிப்பு ஆகும். பொற்ருப்பு என்பது பொன்ல்ை அமைந்த ஊஞ்சலில் இறைவனே ஆலங்கரித்துக் கண்டு களிக்கும் காட்சி ஆகும். பொன்-தாம்பு= பொற்ருப்பு. தாம்பு என்பது தாப்பு என்று ஆயது, வலித்தல் விகாரம் பற்றி என்க.

வலித்தல் மெலித்தல் நீட்டல் குறு க்கல்'

விரித்தல் தொகுத்தலும் வரும்செய்யுள் வேண்டுழி' என்பது இலக்கணம். தாம்பு-கயிறு. ஊசலுக்குத் தாம்பு இன்றியமையாதது ஆதலின், அதனேயே முதன்மையாகக் கூறினர் முத்தமிழ் விரகர். சங்கர இம்ச்சிவாயர் பொருள் கோள் வகையில் ஒன்ருன தாப் பிசைப் பொருள் கோளுக்கு உரைகூறும்போது, "இவற் றுள் தாப்பிசை என்பதற்கு ஊசல் போல் இடை கின்று இருமருங்கும் செல்லும் சொல் என்பது பொருள். ாம்பு என்பது ஊசல்' என்று எழுதிப்போங்ததை ஈண்டு அறிவோமாக. வைகாசி மாதம் வேனிற்காலம் ஆதலின், அக்காலத்தில் ஆண்டவனே ஊசலில் அமர்த் திக் |கொண்டாடுதல் மரபாயிற்று. இவ்வழக்கம் இருந்த தல்ைதான் மணிமொழியாரும் தம் திருவாக்கில் *திருப்பொன் ஊசல்' என்னும் தலைப்பிலும் பாடல் க்கள்ப் பாடுவாராயினர்.