பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. குறள் தரும் இன்பம்

உலகம் புகழும் உத்தமராகிய திருவள்ளுவப் பெருங்தகையார் யாத்த தனிப்பெரு நூலாம் திருக் குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பிரிவினை யுடையதாகி, இல்லற, துறவற நெறிகளை அறத்துப் பாலிலும், அரசியல் அமைப்பு, பொருளாதார அமைப் புக்களைப் பொருட்பாலிலும் கூறிக் காதலர் காதலியர் களின் உளம் ஒத்த அன்புடைமை, வாழ்க்கைகிலே ஆகிய இன்ப இயல்புகளே இன்பத்துப் பாலிலும் கவி னுறப் பேசிச் சென்றுள்ளமையினைப் பலரும் அறிக் திருக்கின்றனர்.

இன்பத்துப்பால் காதலர் காதலியர் இன்பப் பகுதியினை அடிப்படையாகக்கொண்டு பேசப்படுவ தேனும், பொய்யில் புலவராம் செங்காப்போதார் அங் நிகழ்ச்சிகளே கனிநாகரிக முறையில் கவின்று சென் றிருக்கும் வன்மை, எத்தகையவராலும் பாராட்டாமல் இருக்க இயலாது. ஏன்? நோய் கொண்டாலும் கொள்ளலாம் நூறு வயதளவும், பேய் கொண்டாலும் கொள்ளலாம் பெண்கொள்ளல் ஆகாதே’ என்று பெண் கள் சமூகத்தையே பெரிதும் வெறுத்துப் பேசிய துறை மங்கலச் சிவப்பிரகாச சுவாமிகளைப் போன்ற வீரத் துறவியர்களும் பாராட்டியே தீர்வர். அவுர், தெய்வப் புலமைத் திருவள்ளுவனர் என்று போற்றுதல் காண்க.

பண்புமிக்க தலைமகன் பொருள் காரணமாகவோ, தூது காரணமாகவோ, ஒதற் காரணமாகவோ, மற்றும்