பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் தரும் இன்பம் 57

வள்ளுவர் கூறியுள்ள குறட்பாவினைப் பார்க்கும்போது, கினைத்தேன் என்று தலைமகன் கூறினன் என்ற காலத் துத் தலைமகள் ஊடாமல் என்செய்வாள் சூடான பாலப் பருக மறுத்த தலைமகள் என்ன கூறிள்ை ?

'நெஞ்சத்தார் கா த லவராக வெய்துண்டல்

அஞ்சுதும் வேபாக் கறிந்து'

என்று கூறினள். இதன் பொருள் யாது? தோழி, என்மாட்டு வைத்த அன்பு காரணமாக, நீ சூடான பால் கொணர்ந்து என்னேப் பருகுமாறு செய்து, என் சோர்வைப் போக்க வழி காண்கின்ருய். ஆல்ை, நான் சூடான பாலைப் பருக அஞ்சுகின்றேன்: 'எற்றுக்கு அஞ்சுகிருய்?’ என நீ வினவலாம், என் உள்ளக் கோவிலில் என் காதலர் குடிகொண்டுள்ளார். நான் இந்தச் சூடான பாலைப் பருகின், என் நெஞ்சில் இருக் கும் அவர் வெந்து போவார் அல்லரோ ? ஆகவே, எனக்கு இந்தச் சூடான பால் வேண்டியதன்று என்று கூறினள். இவ்வாறு இருக்கத் தலைமகன் மட்டும் மறந்து மறந்து தலைவியை நினைத்தல் தவறுதானே ?

தமிழ் நாட்டுத் தனிப்பெரும் மாதர்கள் காதலன் பால் தணியா அன்பு கொண்ட அணங்குகள். எதைப் பொறுக்க எண்ணிலுைம், தம் கணவன்மார் தம்மைத் தணங்து செல்வதையோ, பிற மாதர்பால் சிங்தை செலுத்துவதையோ சிறிதும் பொறுத்துக்கொள்ள ஆற்றல் இல்லாதவர் ஆவர். தம் கணவர் தம்முடனே இருக்கவே விரும்புபவர். பிற மாதர்களுடன் தம் கணவன்மார் உள்ளம் போகாதவாறு காதலிமார் பல முறை எச்சரிக்கை செய்தும் வந்திருக்கின்றனர். அப்