பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கரும் இன்பம் 6 F.

"ஓவியர்நீள் சுவர்எழுதும்

ஒவியத்தைக் சண்ணுறுவான் தேவியையான் அழைத்திடஆண்

சித்திரமேல் நான்பாரேன் பாவையர்தம் உருவெனில்ர்ே

பார்க்கமனம் பொறேன்என்ருள் காவிவிழி மங்கைஇவள்

கற்புவெற்பின் வற்புளதால்’

என்பது.

இப்பாடல் என்ன கூறுகிறது : 'என் அருமைக் காதலரே நீர் காணச்செல்லும் புது இல்லத்தில் ஆண் பெண் ஆகிய உருவங்கள் நல்ல வண்ணத்தால் அமைக் கப்பட்டிருக்கும். அவ்வுருவங்களில் ஆண் உருவங்களே யான் காண இசையேன்; இதுவே யான் வராமைக்குக் காரணம். பெண் உருவங்களை நீர் பார்க்க யான் சகியேன். அதுவே, நீரும் செல்லுதல் கூடாதெனத் தடை செய்தமைக்குக் காரணம் என்ற கருத்தை அன்ருே கூறுகிறது ? இவ்வளவு பொருள் அமைய வேதநாயகம் பிள்ளை பாடினமைக்கு ஆதாரம் யாது ? இப்படிப் பாடுதற்கு ஆதாரம் நம் வன்ஞவர் பாடிய இன்பத்துப் பாலேயாகும். ஆகவே திருக்குறளைப் பன் முறை படித்து உணர்ந்து குறள் தரும் இன்பத்தில் திளைப்பீராக. தமிழ் நாட்டு மாதர்களின் கற்பினே எண்ணி எண்ணி இறும்பூது எய்துவீர்களாக.